பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 50 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

"கண்பாயல் பெற்ற போல்

கணைக்கால் அலர் கூம்பத் தம் புகழ் கேட்டார் போல் தலைசாய்த்து மரந்துஞ்ச முறுவல்கொள் பாவைபோல முகையவிழ்பு புதல் நந்தச் சிறு வெதிர்ங் குழல்போலச்

சுரும்பிமிர்ந்து இம்மெனப் பறவைதம் பார்ப்புள்ளக்

கறவைதம் பதிவயிற் கன்றமர் விருப்பொடு

மன்று நிறை புகுதர மாவதி சேர

மாலை வாள்கொளா அந்தி அந்தனர்

எதிர்கொள அயர்ந்து செந்திச் செவ்வ ழல் - தொடங்க வந்ததை வாலிழை மகளிர்

உயிர் பொதி அவிழ்க்கும் காலை ஆவது அறியார் மாலை என்மனார் மயங்கியோரே'

(கலித்தொகை , நெய்தல்-2)

(பாயல்-படுக்கை, கணைக்கால்-திரண்டுள்ள தண்டு, பாவை-பெண், முகை-அரும்பு,வெதிர்ங்குழல்-வேய்ங்குழல், இமிர்தல்-ஆரவாரித்தல், பார்ப்பு-குஞ்சுகள், கறவை-பசுக்கள், அமர்விருப்பு - நோக்கும் அவா, மா-விலங்குகள், வதி-வசிக்குமிடம், வாலிழை-தூய அணிகள், பொதி-உடல், என் மனார்-என்று கூறுவர்)

தலைவி கூறுகின்ற இந்தக் கூற்றுள் சூழ்நிலை வருணனை &sjangosi (Discription of Atmosphere) 21solou Gougèrio u முறை மாறுபடாமல் அமைந்துள்ளது. மாலைக் காலத்தைப்