பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

4.

நா. பார்த்தசாரதி 51 படிப்பவர் மனக்கண் முன்னே வரைந்துகாட்டும் காட்சிச் சித்திரமாக விளங்குகிறது. நல்லந்துவனார் பாட்டு, மரங்கள் தலைசாய்ப்பதற்கு அவர் கூறும் உவமை சிந்திக்க வைக்கும் உவமை. எல்லாவற்றிக்கும் மேலாகத் தலைவியின் சோக உணர்ச்சியை விலகாத முறையிற் பதிவு செய்திருக்கிறது பாட்டு)

பகை அழிந்தது

மாலைக்காலம் அவளுக்கு மட்டுமல்ல அவரைப் பிரிந்த எல்லாம் அவளுக்கும் பகைதான். அந்திப் பிறையும் அகல் வானத்துச் செக்கரும் சுந்தரத்தென்றலும் சுகந்த மணமும்கூடிய மாலைப் பொழுதினிலே பக்கத்தில் அமர்ந்து பலபல பேசி அன்புக்கதை சொல்லி இன்பப் பெருக்காற்றும் தலைவன் இல்லையென்றால் அப்பொழுது ஏன் அவர்களுக்கு உயிர்கொல்லும் பகைப்பொழுதாக இராது? ஒரு தலைவிக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. தலைவர் வின்ரவாக வந்து சேர்ந்தார். மாலைக் காலமாகிய பகை அவர் வந்த அப்போதே அழிந்தது. சோகசாகரத்திற்கு அப்பாற் போகக் கரை காணும் போது, சோகத்தின் முடிவுரையும் போகத்தின் முன்னுரையும் சொல்லில் இழைந்து ஒலிக்கவேண்டுமல்லவா?

உண்மையாகவே அவள் வாக்கில் அது அப்படி ஒலிக்கத்தான் செய்கிறது. "தப்புவதற்கு இடமின்றித் துன்பங்கள் செய்யும் மாலைக்காலத்தின் வருத்தம் மிக்க துயர் தீரும்படியாகக் காதலர் வேகமாக வந்து சேர்ந்ததனால் இளையபருவத்து அரசனை வாட்டுகின்ற கொடுமைமிக்குள்ள பகையானது நாட்டைக் காத்திடும் ஆற்றல் வாய்ந்த நல்லரசன் தோன்றியவுடன் அழிவதுபோல இம் மாலைக்காலமும் இருளிலே புகுந்து ஒளிந்து இல்லையாகப் போகின்றது. என்பது தலைவியின் கூற்று. தலைவிக்குப் பகையாகிய மாலைப்போது தலைவன் வந்ததனால் ஒளிந்து மறைந்ததற்கு இளைய அரசன் மேலே வருகின்ற கடும்பகை காக்கும் ஆற்றல் வாய்ந்த அரசன் நீக்கமின்றிக் காக்கத் தோன்றியவுடன் அழிந்ததை உவமையாகக் கூறுவது வியக்கத்தக்கதாக அமைகிறது.