பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 55 &

காண்டக-காணும்படியாக, கானல்-கடற்கரைப்பகுதி, சேர்ப்பன் - நெய்தல் நிலத்தலைவன், அவன்வரை - அவன் எல்லையாக, அரும்பெறல் பெறுதற்கு அரிய)

நல்ல கனவு கண்டுவிட்டால் அது பலிக்கவேண்டுமென்று எண்ணாதவர்கள் நம்மில் யாருமில்லை அதேபோல் தீய கனவுகள் கண்டுவிட்டால் அது பலிக்காமல் போக வேண்டுமே என்று எண்ணாதவர்களும் நம்மில் யாருமில்லை. அதன் நுட்பமென்ன? நன்மையை விழைவதும், தீமையை அஞ்சி ஒதுக்குவதும் மனிதனில் ஊறிவிட்ட இயல்புகள் மாற்றுவது என்பது இலேசில் முடிவது அன்று. சாதாரண மனித உலகத்தின் இயல்பே இப்படியானால் உயிரோடு உயிரும் உணர்வொடு உணர்வும் இரண்டறக் கலந்து வாழும் காதல் உலகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. நல்ல கனவாகிய காதலரின் வரவு நனவிலும் நிகழுமென்று அவர் எண்ணியதில் என்ன தவறு இருக்கமுடியும். கனவு தந்த காதலரை நனவு தரவேண்டுமென்று வேண்டுகிறாள். அவள். நனவுதான் தரக்கூடாதா? என்ன ? தரத்தான் தரட்டுமே ! கனவு தந்தது, நனவு தரட்டும். அவ்ன் மகிழட்டும்.