பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令60 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

நினைக்கத் தக்கது அன்று. பஃறுளியாறும் பன்மலையடுக்கமும் கடல்கோளாற் பாழ்பாடு எய்துவதற்கு முன் தொல்காப்பியம் நிலத்தரு திருவிற் பாண்டியன் அவையத்து அதங்கோட்டாசிரியர் தலைமையில் அரங்கேறியது. அதற்குப் பிறகே கடல்கோள் நிகழ்ந்ததெனக் கொள்ள வேண்டும். வையை யாறும், செவ்வேள் பரங்குன்றும், யாண்டுக் குறிக்கப்பெறும்ாயினும் அஃது ஐயமின்றி இடைச் சங்க காலத்துத் தொல்காப்பியம் அரங்கேறி முடிந்த பின் நிகழ்ந்த கடல்கோள் கெடுப்பக் கெட்டுக் கூடற்கண் நிகழ்த்த சங்கத்தில் தோன்றியதே எனக் கொள்ள வேண்டும். இற்றை நாள் ஆராய்ச்சியாளர் ஒருசிலர் பரிபாடலை ஆறாம் நூற்றாண்டு ஏழாம் நூற்றாண்டு என்று போலி ஆராய்வு செய்கின்றனர். முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே பரிபாடல் என்னும் பாட்டு வழக்கு வீழ்ந்தது. வெள்ளிடை மலை போலிருக்க ஆறாம் நூற்றாண்டிற் பரிபாடல் எழுந்தது என்று கூறுவது நகைக்கத்தக்க செய்தியாகும்! -

ஆகவே இன்னதென வரையறைப்படுத்த முடியாவிடினும் இடைச்சங்க காலத்து முற்பகுதிக்குப் பின்பு அல்லது கடைச் சங்க காலத்துப் பிற்பகுதிக்கு முன்பு 'பரிபாடல்” தோன்றியிருக்கவேண்டும் என்ற முடிவிற்கு வருகின்றோம். இனி, எட்டாம் நூற்றாண்டினராகக் கருதப்படுகின்ற பரிமேலழகர் காலத்தும், அவர்க்கு முற்பட்ட ஓரிரு நூற்றாண்டுகளில் இருந்தவர் என்று கருதப் படுகின்ற காலத்தினவ்ான பேராசிரியர் உரையிலும், இறையனார் களவியல் தோன்றின காலத்தும் இந்நூலின் எழுபது பாடல்களும் இருந்திருக்கின்றன என்பது ஆங்காங்குக் கிடைக்கும் சான்றுகளால் தெரிய வருகின்றது.

எனவே மூன்றாம் நூற்றாண்டிற்கும் பன்னிரண்டாம் நூற்றண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலாதல் பன்னிரண்டாம் நூற்றண்டிற்கும் பதினேழாம் நூற்றண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலாதல் இந்நூல் சிதைந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. இந்நூல்சிதைவு எய்திய பின்னர் பரிமேலழகர் இதற்கு உரை எழுதியிருப்பார் என்பது அசம்பாவிதம் பரிமேலழகர் இந்நூல் முற்றும் இருந்த காலத்து இதற்கு உரைஎழுதத் தொடங்கி உரை எழுதி முடித்தும் இருப்பர் என்பதே பொருந்தும்.