பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 65 &

இலையே நினக்கு! * . மாற்றோரும் இலர்

கேளிரும் இலரெனும் வேற்றுமை இன்றது .

போற்றுநர்ப் பெறுனே மனக்கோள் நினக்கென

வடிவபேறு இலையே" . . (பரிபாடல்) நவை - குற்றம், அணங்கு துன்பம், கடுப்பு - வெகுளி, கேளிர் - நண்பர், மாற்றார் - பகைவர், போற்றுநர் எண்ணுவோர் மனக்கோள் - மனத்திற்கொண்டது, செம்மை . அருளும் தன்மை

3. ஏவலும் இயற்றலும்!

மனிதகுலம் இறைவனுக்கு இட்ட பெயர்கள் பல. எடுத்த கோவில்களும் கணக்கில. ஆனால் இப்பெயர்களில் அல்லது கோவில்களில் எதையும் அவன் வெறுத்து ஒதுக்குவதில்லை. எந்த இடத்திலும் அவன் விருப்பமுடனேதான் இருக்கிறான். பளிங்கு மண்டபத்தில் நடக்கின்ற அதே இறைவனுடைய திருக்கால்கள் பருக்கைக் கற்கள் நிறைந்த வழியிலும் நடக்கின்றன. இரண்டு கையிலும் தங்கக் கடகமிட்டுப் பட்டுடையணிந்து கூப்புங்கைகளிலும் சரி, அரைமுழத்துண்டு கட்டிக் கொண்டு வெறுங்கையோடு கூப்புங்கைகளிலுங் சரி. அவ்வன்பர்களுடைய தாழ்ந்த பணிவான வணக்கத்திற்குள் சிக்கக் கூடியவன் இறைவன். மனிதருக்கெல்லாம் முதல்வனான ஆளுபவனும் அவன். மனிதரெல்லாம் ஏவும் ஏவலாளனாகவும், அவரேவாமல் தானே முற்றும் அறிந்து இயற்றுபவனாகவும் விளங்குகிறான் அவன்.

அவரவர் செய்து முடித்துக் கொண்ட பொருள்களுக் கெல்லாம் காவலாளனும் அவன். அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை அவன். கூப்பும் கைகளுள் கூடி நின்று காக்கும் காவலன் அவன். மானிடர் ஏவும் மாதவனும் அவன். ஏவாது இயற்றும் இறைவனும் அவன்.ஏவலும் இயற்றலும் அவனுடைய தொழில்கள். அதே நேர்த்தில் பேருலகத்தை ஆக்கலும் அழித்தலும் அவனுடைய கடமை. நாம் அதனை அவனது

岛。岛可.5