பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 66 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

உரிமை என்று எண்ணி அஞ்சுகிறோம் அவன் அதை தன்னுடைய கடமை என்று எண்ணி அருளுகிறான்.

அடியார்க்கடியனாய்ப் படியார்க்குப் படியனாய்க் கொடியார்க்குக் கொடியனாய். விளங்குகின்றான் முதல்வன். அவன் கோயில் வாயிலில் அரசனுக்கும் ஆண்டிக்கும் ஒரே வரவேற்பு, விரிந்து பரந்து விண்முகடு தடவும் பேரொளிப் பிழம்பாய் கீழ்த்திசையில் அவன் ஆலயம் தெரிகிறது. நெருங்கினோர்க்கு அது வெறும் மாயையாக மறைந்து விடுகிறது. தொலைவில் நின்று கண்டோர்க்கு அந்தத்துய ஒளி வெள்ளம் இடையறாது காட்சியளிக்கிறது. காட்சியளிக்க ஏவினால் அவன் காட்சியளிக்கிறான். வேண்டுவதை இயற்றித் தருகிறான். நாம் ஏவுகிறோம். அவன் இயற்றுகிறான். வேறில்லை.

எவ்வயினோயும்

நீயேநின் ஆர்வலர் தொழுதகை யமைதியின்

அமர்ந்தோயும் நீயே அவரவர் ஏவ -

லாளனும் நீயே அவரவர் செய்பொருட்

கரணமும் நீயே. -

(பரி பாடல்). எவ்வயினோயும்-எவ்விடத்திலும் இருப்பவனும் அமைதி-தாழ்ச்சி செய்பொருட்கரணம் - செயல்கட்கு முதன்மை

4. வேண்டும் வரமும் வேண்டா வரமும் -

கடுவன் இளவெயினார் என்ற பரிபாடற் புலவர் இறைவனிடம் வரம் வேண்டுகிறார். அவர் தாம் வேண்டும் முகமாக உலகிற்கே வேண்டிய பாடம் ஒன்றை அறிவிக்கிறார். பொன் வேண்டும், பொருள் வேண்டும், போகம் வேண்டும் என்று வேண்டாது, அருள் வேண்டும், அன்பு வேண்டும், அறம் வேண்டும் என வேண்டுவதுதான் மனிதத் தன்மைக்கு அழகு. பொன்னும் பொருளும் போகமும் வேண்டுவது தன்ன்ல்நோக்கம். அன்பும் அறமும் அருளும் வேண்டுவது உலக நல நோக்கம்.