பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 67 &

எனக்கு எனக்கு என்று வேண்டி மனித வாய் வறண்டு போனது. செல்வம், செல்வம் என்று மனிதன் சீரழிந்து கொண்டிருக்கிறான்.

அந்தப் போலி நோக்கம் சாக வேண்டும். அன்பு, அருள், அறம் என்று இறைவனை வேண்ட வேண்டும். மனித உலகம் அந்தப் பெருநோக்கத்தோடு ஆதிமுதலை அணுகவேண்டும். எனக்குக் கொடு என்று கேட்பது பிச்சை. உலகிற்குத் தா என்று கேட்பது மனித உரிமை கடவுளோடு மனிதனுக்குள்ள உறவு முறையுங்கூட. கடுவன் இளவெயினார் வேண்டுகிறார் - "இறைவனே! உன்னிடத்தில் யாங்கள் கேட்பவை பொருளும், பொன்னும், போகமும் அல்ல! அருளும் அன்பும் அறமும் ஆகிய இம் மூன்றுமேயாம் நின்னிடத்தில் வேண்டும் வரம்". பொருளும் பொன்னும் போகமும் வேண்டுவது தகுதியில்லை வேண்டினால் இறைவன் தரல் வேண்டும் என்னும் உறுதியும் இல்லை. பொருளும் பொன்னும் போகமும் தனிமனிதனை வாழ வைக்கும் கருவிகள். அருளும் அன்பும் அறனும் ஆகிய இவைகள் மனித உலகை வாழ வைக்கும் அருட்பேறுகள். பொருளால் செருக்கும்,

பொன்னால் மயக்கும் போகத்தால் மறவியும் பெருக, யான் மனிதனாக வாழ இடமிருக்காது. அருளால் பொதுமையான அன்பும், அன்பால் அறமும் பல்க யான் மனித உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று விரும்புகின்றேன். எனக்கல்ல என்னுடன் வாழும் உலகிற்கும் அருள் வரமும் அன்பு வரமும் அறவரமும் கொடு, "இன்றைய உலகில் கடவுள் வழிபாட்டு முறையில் மனித உலகம் மறந்துபோன ஒரு செய்தியை நினைவூட்டுகின்றார் புலவர் எது வேண்டும் வரம், எது வேண்டா வரம் என்பதனை உருக்கமாக வெளிப்படுத்துகின்றார்.

"யா அ மிரப்பவை

பொருளும் பொன்றும் போகமுமல்ல -

நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்”

- (பரிப்ாடல்) இரப்பவை - கேட்கின்றவை, நின்பால் - நின்னிடத்தில்