பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 68 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

5. எல்லாம் நீயே!

சுவை, ஒளி, ஊறு, ഉഒക്കെ, நாற்றம் என்னும் ஐம்புலன்களும் அவற்றின் நுகர்ச்சியுணர்வும் ஆகிய எல்லாம் அவன் செயல். இவ்வைம்புலன்களுக்கும் உரிய ஐம்பொறிகளும் அவன் சாயைகள். அவன் நின்றியக்கும் அதிசயக்கருவிகள். இவ்வைம்புலன்களுள் ஒசைக்கு இடனாகிய விசும்பும் அவனது அருள் நிழலின் பரப்பே. ஒசைக்கும்.உணர்வுக்கும் இடனாகிய காற்றும் அவனியக்கமே. ஒசை, ஊறு, ஒளி என்னும் மூன்றினுக்கும் இடனாகிய தீயும் அவனேயாகத் திகழ்கிறான். ஒசை, ஊறு, ஒளி, சுவை என்றும் நாற்புலன்களுக்கும் இடனாகிய நீரிலும் அவன் நின்றருளுகிறான். சுவை ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் ஐந்திற்கும் இடனாகிய நிலனும் அவனாகவே நிலைத்திருக்கிறான். இப்படி அவன் ஐம்புலன்களும், ஐம்புலன்களால் உணரப்படும் பூதங்களுந் தானேயாகத் திகழ்தலின் மூலப்பகுதியும், அறமும், அநாதியான காலமும் வானமுங் காற்றொடு கனலுங் கூடிய இம்மூவேழுலகத்தில் முற்றி நின்று வாழும் உயிர்கள் யாவும் அவனிடத்தைச் சார்ந்து அவனாகவே அவனது சாயைகளாகவே வாழ்வன ஆகின்றன. அவனே உலகம், அவனே உயிர்கள், அவனே புலன்கள். எல்லாம் அவனே. திறமையான ஒரு நடிகனாக இருந்து உலக அரங்கத்தை நிலைநின்ற புகழோடு ஆணாகவும், பெண்ணாகவும் எல்லாமாகவும் நடித்து இயக்கி வருகிறான் அவன். அவன் இல்லையானால் அந்தப் பேரரங்கு அடியோடு சாதல் ஒருதலை. அவனே காலமூலன்-ஏன் காலகால கோலாகலுனுங் கூடத்தான். - . : . . .

"சுவைமை இசைமை

தோற்றம் நாற்றம் ஊறு அமைவும் நீயே

யடுபோர் அண்ணால் அவையவை கொள்ளும்

கருவியும் நீயே முந்தியாம் கூறிய

ஐந்தன் உள்ளும்