பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 &

வையை வளம்

திருமால், செவ்வேள் ஆகிய கடவுளர்களைப்பற்றிப் பரிபாடல் காட்டும் சிறந்த காட்சிகளை இதுவரை கண்டோம், இனி நாம் காணவேண்டிய காட்சிகளாகப் பரிபாடலில் எஞ்சியிருப்பன வையைக் காட்சிகளும் மதுரை நகர் மாண்புமே. இப்பொழுது கிடைக்கின்ற இருபத்திரண்டு பாடல்களுள் 1,2,3,413.15 ஆகிய ஆறும் புறத்திரட்டிலொன்றும் திருமாலுக்குரியன. 5,8,9,14,17,18,19,21 ஆகிய எட்டும் முருகக்கடவுட்குரியன. 67,01,12201622 ஆகிய எட்டும் புறத்திரட்டில் ஒன்றும் ஆக ஒன்பதும் வையைக்குரியன. எனவே வையையைப் பாடும் பாடல்கள் தலைமை பெறுகின்றன. தலைமை பெற்றுச் சிறப்புறுகின்றன. சங்க காலத்தில் தமிழ்பாட்டென்று աոff பாடினாலும் வையை இடம் பெறாமலிருக்க முடியாது."வையை யென்னும் பொய்யாக் குலக்கொடி" என்று கூறி இறுமாந்தார் இளங்கோவடிகள். தமிழ், வையையோடு நெருங்கிய தொடர்புடையதென்பதைத் "தமிழ் கண்டதோர்வையை" என்று விளக்கினார் கவிஞர் பாரதியார். -

வான் பொய்ப்பினும் தான் பொய்யா வளத்தில் வேண்டுமானால் காவிரி சிறப்பெய்தி இருக்கலாம். தமிழ்கண்ட பெருமை ஐயமின்றி வையைக்கே உண்டு என்பதை யாரும் மறுக்கவே முடியாது. சங்க காலத்திலிருந்த வையைநதி இடையறாத புனலொழுக்கால் மதுரையை இன்ப மூட்டியது. இன்றுபோல் அணைக்கட்டுக்கள் அன்று இல்ல்ை வருகிற புனலைத் தேக்காது வளமாய் ஒடவிட்டாள் அன்றிருந்த வையைத்தாய், வையை வளத்தை இடையிடையே கூறும் பேறு சங்க நூல்கள் பலவற்றுக்கும் உண்டு. எனினும் பரிபாடலின் நோக்கில் அதன் வளம் சித்திரிக்கப் படும்போது அது ஒரு தனிவனப்பை பெறுகின்றது. வையை ஒரு தெய்வீகப் பேரியாறு.

“ஆற்றுப் பெருக்கற்றடி சுடு நாளும் -

ஊற்றுப் பெருக்காலுவ கூட்டும் வையை” என்ற மொழிக்கு இலக்காக இன்றும் வையை தவறிவிடவில்லை. இயற்கையின் உட்பொருளைத் தத்துவ ரீதியாக உணர்ந்தவர்க்கு