பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 6 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

கூறினோம். "அன்பு ஒரு ஆச்சரியமான பொருள்; அது கொண்டாரைப் பிரியாது பேண வைக்கும் இயல்பு வாய்ந்தது" என்றான் வேட்ஸ் வொர்த்து. "பிரியுங்கால் உயிர்விடுவேன், ஆதலி னாலே நீ பிரியாதே' என்று கவித்தொகைக் காதலி தன் தலைவனிடம் கூறக் காண்கிறோம்.

அகநானூற்றில் ஒரு புலவனும் இதைக் கூறுகிறான். ஆசிரியர் திருவள்ளுவரும்

வாழ்தல் உயிர்க்குகன்னள் ஆயிழை காதல் அதற்கு கன்னள் நீங்கு மிடத்து

என்று இதை கூறுகிறார்.

பாவைக்கலி

பாலை என்பது அகத்திணையில் பிரிதலொழுக் கற்குரிய திணை, தலைவனைப் பிரிந்த தலைவியிடம் நிகழும் நிகழ்ச்சிகளையும் கூற்றுக்களையும் அழகிய முறையிற் கூறுவது இத்திணை. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலைக்குரியன. தலைவன் தான் பிரிவதை தோழிக்குக் குறிப்பால் உணர்த்துவான். கூற்றால் உணர்தலும் உண்டு. அதைக் கேட்ட தோழி தலைவனது பிரிவைத் தடை செய்து உரைப்பாள். இதற்குத் "தோழி செலவழுங்குவித்தல்" என்று பெயர். தலைவன் பிரியின் தலைவி உயிர் வாழ்வது அருமை என்பாள். இனி இங்ங்னம் தோழி செலவழுங்குவித்தற்குரிய கலித்தொகைக் காட்சியைப் பார்ப்போம்.

பிரிவும் பரிவும்

"ஒரு காலும் மறத்தற்கரிய காதலையுடைவளாகிய இவள் இவ்விடத்தே இருக்க, பிரிவுமேற்கொண்டு பிரியத் துணிந்த தலைவரே கேளும், தம் பொருளெ ல்லாம் தீர்ந்து போக வறுமையெய்தி வந்து கை நீட்டி இரந்தவர்களுக்கு அவர்கள் விரும்பும் யாதானுமொரு பொருளைக் கொடாமை இழிவாகும் என்றெண்ணி வழியிலே உள்ள மலையைக் கடந்து பிற நாட்டிலே சென்று பலவகைச் செயல்களை இயற்றிய அதனால் ஈட்டிய