பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 79 &

கட்டம் நீரில் எப்படி எப்படி எல்லாம் விளையாட்லாமோ அப்படி அப்படி எல்லாம் விளையாடி மகிழ்கிறது மக்கள் கூட்டம்.

சிறுசிறு பொய்கைகள் வையை யாற்றின் கரையிலே உள்ளன. அப்பெய்கைகளில் அழகிய மலர்கள் மலர்ந்துள்ளன. மலர்ந்த பூக்களோடு நீர் நிறைவு காட்டி விளங்கும் அப்பொய்கைகளில் மலர் முதலியன உள்ளாழும் படியாக வையை வெள்ளம் மேல் வந்ததென்ற ஆரவாரம் ஒருபக்கம். யாற்றிடைக் குறையிலுள்ள மணற் பரப்பில் பெண்கள் சிறு சிறு பாவைகளை மணலிற் செய்து விளையாடினர். விரைவாக வந்த புது, வெள்ளத்தின் அலைகள் அவர்கள் பாவைகளைச் சிதைத்துவிட அவர்கள் இடுகின்ற கூக்குரல் ஒருபக்கம். கதிர்விடும் பருவத்திலுள்ள இளநெல் வயல்கள் ஒருபுறமும், அரியவேண்டிய காலத்தை அடைந்த சூல் முற்றிய கதிர் விளைந்த நெல்வயல் ஒரு புறமாக விளங்குகின்றன. இவைகளுள்ளே புது வெள்ளம் புகுத்துவிட்டதென்று வேளாண் வாழ்க்கையர் எய்திய பரபரப்பு ஒரு பக்கம். - . இவைகளெல்லாவற்றுக்கும் மேலாக ஊரையே நீர் பெருகி வளைத்துவிட்டது இனித் தப்புவ்தரிது என்னும் அச்சத்திற்குரிய செய்திகள் ஒருபுறம். வானத்தில் மேகம் மூடுதலின்றித் திறந்து கொட்டத் தொடங்கியது. அதை இனி அடைக்கமுடியாது என்ற பேச்சொரு பக்கம். இப்படியாக வையையில் வந்த வெள்ளம் வெறும் வையை வெள்ளமாக மட்டும் இருக்கவில்லை-மக்களிடையே தோன்றிய ஆரவார, வெள்ளத்திற்கும் காரணமாக அஃது அமைந்தது. ஓர் ஆரவாரத்தானே மற்றொரு ஆரவாரத்தைப் பிறப்பிக்க முடியும்?

"கவிழ்ந்த புனவில்

கயந்தண் கழுநீர் அவிழ்ந்த மலர்மீ

துற்றென ஒருசார் மாதர் மடநல்லார்

மணலின் எழுதிய பாவை சிதைத்த