பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 81 & உடையுடனே செய்ய வேண்டிய சடங்கு அது. சடங்கு முடிந்ததும் அதுவரை குளிரைப் பொறுத்துக் கொண்டிருந்த பெண்கள் தாங்க முடியாமல் பக்கத்தில் அந்தணர்கள் வளர்க்கும் வேள்வித்தீயை நோக்கிக் குளிர்காய ஒடுகின்றார்கள். பெரிய நில உலகம் முழுவதும், மழைபெய்வதாக! என்றுதான் இந்த நோன்பை இயற்றுகின்றனர் கன்னிப்பருவத்து இளமகளிர்.

“வெம்ப தாக

வியனில வரைப்பென அம்பா வாடலி

னாய்தொடிக் கன்னியர் முனித்துறை முதல்வியர்

முறைமை காட்டப் பனிப்புலர் பாடிப்

பருமண லருவியின் ஊதை யூர்தர - வுறை சிறை வேதியர் நெறி நிமிர துடங்கழல் பேனிய சிறப்பிற் றையல் மகளிர்

ஈரணி புலர்த்தர வையை நினக்கு

மடைவாய்த் தன்று

- - (பரிபாடல்) வெம்பாதாக-வெப்பமெய்தாது மழைபெய்வதாக, வியன்-மிகப் பரந்த, அம்பா-தாய், மு னித்துறை

முதல்வியர்-முதுபார்ப்பனியர், ஊதை-குளிர்ந்த வாடைக்காற்று, மடை-சமைத்த பொருள்கள், வாய்த்தன்று-வாய்த்தது.

கன்னியர் தந்தாயரோடு சென்று நீராடுவதால் இதற்கு "அம்பாவாடல்" என்று பெயர் வந்தது. தைந் நீராடலாக இருந்து வந்த இவ்வழக்கு இக்காலத்தில் மார்கழி நீராடலென மார்கழித் திங்கள் நிறைமதி நாளில் புலர் விடியற்போதில் நிகழலாயிற்று. மாணிக்க வாசகர். ஆண்டாள் முதலிய அடியவர்களும் மார்கழி நீராடலென்றே கொண்டு திருவெம்பாவை, திருப்பாவை

க.கா.6