பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•o 82 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

பாடினார், மார்கழி, தை ஆகிய இரண்டு திங்களிலுமே &FTS) (ు நேரத்து நீரில் ஒரு தெய்வீக ஆற்றல் இருக்கச் செய்கிறது. ஒடும் நீரானால் அவ்வாற்றல் இன்னும் மிகுதியாகிறது.

பூம்புனல் யாறு

வையை யாற்றின் இரு கரைகளிலும் பூத்துக் குலுங்கித் திசைகளெல்லாம் புதுமணம் பரப்பும் மலர்ச்சோலைகள் விளங்குகின்றன. மலர்களில்தான் எத்தனை வகைகள்? வெள்ளை நிறமும் வீறியெழும் நறுமணமும் உடைய மல்லிகை. கன்னிப் பெண்ணின் சிறு முறுவல் போல் ஒளிவிடு முல்லை. சண்பகம், அல்லி, கழுநீர், தாமரை, மகிழம்பூ குருக்கத்திப்பூ பாதிரிப்பூ, சுரபுன்னைப்பூ, புன்னாகம் முதலிய பலவகை மலர்கள் இருகரையிலும் இலங்கி மணம் மிகுக்கின்றன. அப்பூக்களுட் சில வையையாற்றின் தெளிந்த நீர்ப்பரப்பில் உதிர்ந்து மிதக்கின்றன. "புனல்யாறு அன்றிது-பூம்புனல்யாறு" என்ற இளங்கோவடிகள் வாக்கு இங்கே மெய்ப்படுகின்றது. வையையாற்று நீர் மாலையில் கண்ணாடிபோல் ஒளியும் தெளிவும் பெற்று விளங்கும். காலையில் சிவந்த குருதிபோற் கலக்கமெய்தி விளங்கும். தெளிந்து விளங்கும்போது வானுலகத்தைத் தன்னுக்குள்ளே விளக்கக் காட்டும்படியான ஆடிவளையம் போல அது பேரொளி பிறங்கும் பாறைப் பகுதிகளில் பரந்த இடங்களில் நிலைபெற்று வான வளையத்தைத் தனக்குள் அடக்கிக் காட்டுகிறாள் வையைத்தாய்

"மல்லிகை மெளவல்

மணங்கடமிழ் சண்பகம் அல்லி கழுநீ

ரரவிந்த மாம்பல் குல்லை வகுளங்

குருக்கத்தி பாதிரி நல்லினர் நாக

நறவஞ் சுரபுன்னை எல்லா கமழு

மிருசார் கரை கலிழத் தேறித் தெளிந்து