பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 84 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

அப்பாடல்களில் மதுரை நகரின் மாண்பு ஈடும் எடுப்பும் அற்ற முறையிலே கூறப்படுகிறது. "புலவர்களுடைய அறிவாகிய துலாக்கோலின் தட்டுக்களில் ஒன்றில் உலகம் முழுவதையும் இருத்திப் பிறிதொன்றில் பாண்டியனது மதுரையையும் இருத்துவோமானால் உலகின் நிறைகுறையுமேயன்றி மதுரையின் நிறை குறையாது" என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறது. பரிபாடல்.

"உலகம் ஒரு நிறையாத்தானோர் நிறையாப்

புலவர் புலக்கோலால் தூக்க-உலகெலாம்

தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன்

நான்மாடக் கூடல் நகர்"

-பரிபாடல் மதுரைத்திரட்டு,

புலக்கோல்-அறிவுத்தராசு, வாட-குறையா, நான்மாடம்-நான்கு - மாடங்களாற் சிறந்த,

இதுமட்டுமல்ல வாழ்வென்றாலே மதுரையில் வாழும் வாழ்வும் செவ்வேள் திருக்கோயில் கொண்டிருக்கும் பரங்குன்றில் வாழும் வாழ்வும்தான் என்கிறது பரிபாடல். வீடுபேறு கிடைப்பதற்குத் தகுதியுடையவர்கள் இவ்விருவர்தாம் என்பதும் பரிபாடற் கருத்தே. இவைகளில் வாழ்பவர்கள்தாம் வாழ்பவர்களாகக் கூறப்படுகிறார்கள். அத்துணைச் சிறந்த வாழ்வு

"ஈவாரைக் கொண்டாடி

ஏற்பாரைப் பார்த்துவக்கும் சேய்மாடக் கூடலும்

செவ்வேள் பரங்குன்றும் வாழ்வாரே வாழ்வா

ரெனப்படுவார் மற்றையார் போவர்ரார் புத்தேளுலகு"

-பரிப்ாடல் மதுரைத்திரட்டு