பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 7 * பொருளை இரந்தவர்களுக்குக் கொடுக்கலாமென்று எண்ணி என்றும் அழியாது நின்று நிலைத்த கற்பினையுடைய இவளுக்கு நின் பிரிவு வாழ்வாமோ? நீ பிரியின் இவள் உயிர் வாழமாட்டாள்" என்கிறாள்தோழி. இதற்குள்ள பாட்டு வருமாறு :

"மறப்பருங் காதலிவளிண்டொழிய இறப்பத் துணிந்தனிர்கேண்மின். தொலைவாகி இரந்தோர்க் கொன்றியாமை இளிவென மலையிறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருளாகுமோ நிலைஇயகற்பினாள் நீநீப்பின் வாழாதாள்' (இறப்ப - பிரிய, தொலைவாகி-இழந்து-மலையிறந்து மலையைக் கடந்து)

(பாலைக்கலி)

தலைவி பக்கத்தே இருக்கின்றாளாதலால் தோழி தலைவியை இவளென்றும், தலைவன் முன் நிற்கின்றான். ஆதலால் அவனை நீ என்றும் சுட்டுகிறாள். இந்தக் காட்சியில் தலைவிக்காகத் தோழி தலைவனிடம் தடை செய்வதையும் அத்தடைக்கு அவள் கூறும் மறுக்க முடியாத காரணங்களும் நன்றாகத் தெரிகின்றன.

கான வழியிற் காதல் நினைவு

பிரிவுணர்த்திய தலைவனைத் தோழி, வேறு காரண்ங் கூறி அதனாற் பிரிவைத் தடுக்கிறாள். "நீ பொருள் தேடுவதற்காக வேற்றுார் செல்வதற்காகக் காட்டைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். நீ கடந்து செல்லும் காட்டிலே கானும் ஒவ்வொரு காட்சியும் உனக்குத் தலைவியை நினைவூட்டும். அந்நினைவு பொறுக்க முடியாமல் நீயே மீண்டுவிட நேரும்" என்று தோழி தலைவனிடம் கூறுவாள். இதைப்பற்றிய அழகிய காட்சியொன்று கலித்தொகை சித்திரங்களில் உண்டு. கான வழியிற் காதல் நினைவு எழுதற்குரிய காரணங்களான காட்சிகளைத் தோழி மிக அழகாக எடுத்துக் கூறுகின்றாள். தனி நயமும் அதிலமைந்துள்ளது.