பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•o 88 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

தமிழ்வேலி-தமிழாகிய வேலி, நிலை இ-நிலைத்து, கொடித்தேரான்-முருகக்கடவுள், குன்றம்-திருப்பரங்குன்று.

திருமகள் நெற்றியில் ஒரு திலகம் போல விளங்குகிறது கூடற்றிரு நகர். பாண்டியன் திருநகரிற் பரந்து ஒடும் வையைத் தெய்வமாகிய வளநதி உள்ள வரையில் மதுரையின் புகழ் குன்றப் போவதில்லை. உலகில் தனியொரு பெருநகராய் விளங்கிப் புகழ்பூத்தே வாழும் இம்மதுரை.

"செய்யாட் கிழைத்த

திலகம் போற் சீர்க்கொப்ப வையம் விளங்கிப்

புகழ் பூத்தலல்லது பொய்யாத லுண்டோ

மதுரை புனைதேரான் வையை யுண்டாகு மளவு"

(பரிபாடல்-மதுரை)

செய்யாள்-திருமகள், சீர்க்கொப்ப-புகழ்க்குப் பொருந்த வையம்-உலகில், புனைதேரான்-பாண்டியன்.

முடிவுரை

'பரிபாடல்" என்ற பெருநூலின் ஒளிரும் கடவுள், இயற்கை, நகர் மாட்சி ஆகிய மூவகை க் கவின்சான்ற காட்சிகளை எளியநடையில் இதுகாணும் விவரித்தோம். இக்காட்சிகளால் தமிழ் இலக்கியத்துறை முற்றிய புலமை வாணர்க்குப் புெரும் பயன் இன்றெனினும் ஏனையோக்கு இலக்கிய நுகர்ச்சிக்குரிய தகுதியை ஆவது இவை தாராமற் போகா, இம்முறையில் வாய்ப்பு நேருமாயின் ஏனையவற்றையும் ஓரளவு எழுத வேண்டு மென்னும் அவா உண்டு. கடவுளைப் பற்றிய உயர்ந்த சித்தாந்தங்களை இந்நூற்காட்சிகளில் நாம் கண்டது போலப் பயன் தரும் காட்சிகள் வேறுசில நூல்களிலும் உள்ளன. அவற்றையும் இம்மாதிரித் துறையில் ஒரு பொழுது எழுதும் ஆசை இருக்கிறது, வாய்ப்பை ந்ல்கி இறைவன் அருள் புரிவானாக!