பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•o 92 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

"கடல் தாவும் எழுவாய் தொடங்கித் திருவடிதொழும் இறுவாய்காறும் அழகு அணு அனுவாகத் செறிந்திருக்கிறது சுந்தரகாண்டம் என்பதை யாவரும் ஒப்புக் கொள்வர். அப்படி ஒப்புக் கொள்ள வேண்டுமானால் அதனை வலியுறுத்தி வகைசெய்து காட்டத் தகுந்தவாறு இக்காண்டத்தின் பெயர்ப் பொருள் இருக்க வேண்டும் என்பது இன்றியமையாதது. கம்பனைப் பொறுத்தமட்டில் சுந்தரகாண்டத்தின் பதினைந்து பாடல்களையும் முழுக்க முழுக்கப் பதினைந்து அழகுக் களஞ்சியமாகவே கட்டியிருக்கிறான். செளந்தரியக்கலையின் அதியற் புதமான துண்ணிய வேலைப்பாடுகளைக் கவிச்சக்ரவர்த்தியின் இக்காண்டத்தில் ஆதியிலிருந்து அந்தம் வரை அணிபெறச் சமைத்திருப்பதைக் காணலாம். இன்னொரு நயம் என்னவென்றால் முந்தினகாண்டத்தில் உற்பத்தியும் வருகிற காண்டத்தில் சங்கமமும் பின்னிக்கிடக்குமாறு தோன்றும் ஒர் எழில் நதிபோன்ற இயற்கையான சந்தர்ப்ப அமைதியும் இக்காண்டத்திற்கு இருக்கிறது. இவைகளையெல்லாம் கம்பன் கவிதைத் துணைகொண்டு சுருங்கிய அளவில் விமர்சித்துக் காட்டுவதே இத்தொடரின் நோக்கம்.

கடல் கடந்த காதல்

இராமபிரானுடைய பூரண பக்தனாகிய அனுமன் அவனிடம் தனக்குள்ள பக்தியாகிய காதலை எத்துணையோ அருஞ்செயல்களால் நிதரிசனமாக்கிக் காட்டுகிறான். அந்தகைய செயல்களில் தலை சிறந்தது கடல்கடந்து செய்யும் இந்தக்காரியம், திருவாளர் பியூரீ அவர்கள் கூறுவது போலக் கடல்தாவும் சாகஸ்த்தை ஒரு பெரிய கலையாகவே படைத்துக் காட்டியிருக்கிறான் கம்பன், -

பரம்பொருளின் மனிதத் தோற்றமாகிய இராமனிடம் அனுமன் கொண்டிருந்த ஆன்ம உறவாகிய பக்திக்காதலின் அதியற்புத சக்தியைக் கடல் கடந்து செய்யும் இந்தத் திருப்பணியினால் கம்பன் விளக்க முற்படுகிறான். கடலைத் தாவுவது சாதாரணச் செயலல்ல. புலன்களை அடக்கி மானத்தை ஒருநிலைப்படுத்தி ஏகாக்கிர சித்தனாகத் திகழ்ந்த திறனும் எம்பெருமானிடத்தில் அனுமனுக்கு இருந்த அசைக்க முடியாத உயிர்க்காதலுமே இந்த அரிய பெரிய கருமத்தை எளிதிற் செய்ய