பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 93 &

உதவியிருக்க வேண்டும். சுந்தரகாண்டத்தின் முதற்படலமாகக் கம்பன்கடல் தாவுபடலத்தை அமைத்துக் கொண்டிருக்கிறான். கடலைக் கடந்து முடித்தவுடன் அனுமன் எத்தகைய திருப்தி பெற்றிருப்பானோ அதே திருப்தியைச் சுந்தரகாண்டத்தைப் படித்து முடித்தபின் காவியரஸிகர்களும் பெற்று விடலாம். அற்புதத்திலும் அதிசயத்திலும் பிரம்மிக்கத் தக்க ஒருவகை அழகு இருக்கிறது. அந்த அழகைச் சுவைத்து மனமகிழ்வது ஒரு தனிப்பட்ட இன்பம்.

"நாலினோடு உலகம்மூன்றும்

நடுக்குற அடுக்கிநாகர் மேலின் மேல் நின்றகாறுஞ்

சென்றகூலத்தின்விண்டு காலினால் அளந்த வான

முகட்டையுங் கடக்கக் கால வாலினால் அளந்தான் ! என்று

வானவர் மருளச் சென்றான்!!

(கடல்தாவுபடலம்-33)

கூலம்-பரப்பு, விண்டு-திருமால், மருள-மயங்க.

என்று அந்த அற்புதத்தின் அழகைக் கம்பன் தன் சொந்தச் சாதுரிய அழகுடன் சேர்த்து அளிக்கிறான் ஏறக்குறையத் தொண்ணுறு பாடல்களுக்கும் அதிகமாகவே கடல்கடந்த பக்திக்காதல் வருணிக்கப்படுகிறது. பிரம்மாண்டமான ஒரு திருப்பணியை எவ்வளவு கவிதாவேகத்துடன் பாடவேண்டுமோ அவ்வளவு வேகமும் அழகு கெடாத கவிச்சுவையும் கம்பனின் கடல்தாவுபடலத்தில் குறைவற நிறைந்திருக்கிறது. கடல்தாவும் நிகழ்ச்சியை அனுமன் வானத்தில் கடலுக்குமேல் தாவி எழுந்தது முதல் இலங்கையை அடையும் வரை வனப்பு வரையறை பிறழாமல் அசாதாரண மான கற்பனைகளாலும் வருணனைகளாலும் பேசிச் செல்வதினால் "சுந்தரகாண்டம்" என்ற பெயரை இந்தமுதற் படலமும் ஒருவகையால் விளக்க ஏற்றதாகவே பாடப்பட்டிருக்கிறது. இப்படியே இதனைப் பதினைந்து படலங்களிலும் அமைந்திருக்கக் காணலாம் அப்போதுதான் இந்தக்காண்டம் முழுவதுமே செளந்தரியச் சேர்க்கை என்ற நுணுக்கமான உண்மை புலப்படும்.