102
மா. இராசமாணிக்கனார்
தவறிய அரசன் கீழ் வாழும் மக்கள், துன்புற்றுத் துடிப்பது போல், என் கண்கள், கலங்கி, நீர் சொரியுமானால், நான் என் செய்வேன்?
மலர்கள் நிறைந்த கொம்பில் மொய்க்கும் தேனீக்கள் யாழ் போன்ற இனிய ஓசை எழுப்பும் இளவேனிற் காலம் வரக்கண்டும், கொள்கையில் வழுவாத காதலர் செய்த தீமையை மறைக்கவே நான் முயலுகின்றேன்; ஆனால் மறைத்து வைக்க நான் முயலினும் தன் சுற்றத்தார் கெட்டழிய, அவர் கேட்டின் மீது வாழக் கருதுவோன் இறுதியில் அழிவது போல், என் தோள்கள் தளர்ந்து அழகிழந்து, தம் முன்கையில் இட்ட வளைகளையும் கழன்றோடச் செய்யுமானால், நான் அதற்கு என் செய்வேன்?
- என்று கூறிப் பெண்ணே! உன் அகத்துயரைப் புறத்தே கூறிப் புலம்பாதே; கண்ணுக்குற்ற வருத்தத்தைக் கைகள் விரைந்து சென்று களைவது போல், வரும்நாள் இது என நாம் எண்ணி இருந்த அந்நாள் எல்லை கடந்து போவதற்கு முன்பே, காதலர் குதிரை ஊர்ந்து வந்து விட்டார் காண்!
மன்-நிலைபெற்ற. ஏம் உற-வாழுமாறு. புரவீன்று-பாதுகாத்து. கால்-வாய்க்கால். இறந்தபின்-நீர்வற்றிய பின். அறல்-அருவி. வார-ஒழுகி ஓட. இமிர்ந்து-ஒலித்து. இறுத்தந்த-வந்து தங்கிய. தாது ஆடி-மகரந்தத் தூள்களிற் படிந்து. கரி பொய்த்தான்-பொய்ச்சான்று கூறியவன். எரி பொத்தி-காமத்தீமுண்டு. பொறை தளர்-பாரம் தாங்காது தளரும். சிதரினம்-வண்டுக் கூட்டம். இறைகொள-தங்க. நிறை-நிறையெனும் குணம். பனிவாரும்-நீர் ஒழுகும். தளை-அரும்பின் முறுக்கு. பூஞ்சினை-பூங்கொம்பு. சுரும்பு-வண்டு. கொளை-ஒழுக்கம். ஆனா-அமையாது. நெகிழ்பு-கழன்று. அலமரல்-வருந்தற்கு. எல்லா-ஏடி! இறவாது-கடவாது.
34. துனி கொள்ளல்!
வேனிற் பருவவரவு கண்டு வருந்தினாள் ஒரு பெண். வருந்துவது நன்றன்று என அறிவுரை கூறினாள் அவள் தோழி. 'கணவர் வருவேன் எனக் கூறிச் சென்ற காலம், இவ்வேனிற் காலம் அல்லவோ? எனக் கேட்டுக் கண்ணீர் சொரிந்தாள் அப்பெண். அந்நிலையில் அவன் தேர் வரக் கண்ட தோழி, மகிழ்ச்சிக்குரிய அச்செய்தியை அப்பெண்ணுக்குக் கூறியது இது: