பக்கம்:கலித்தொகை 2011.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

105


அழகும், அழிக்கலாகாத திண்மையும் வாய்ந்த தேர்ப்படை மிக்க பாண்டியன் வாக்கும், வஞ்சினமும் தப்பாது வாய்ப்பது போல், குறிப்பிட்ட அந்நாள் வரை, நம்மை மறந்து இருக்க மாட்டாத நம் காதலர் வந்து விட்டார். ஆகவே, உன் வருத்தம் இன்றோடே ஒழிவதாக!

நந்த-வளம்பெற. சினை-கொம்பு. ஈன-துளிர்க்க. நண்ணி-அடுத்து. அயிர்-நுண்மணல். வரித்து-அழகுசெய்து. அறல்வார-அருவி ஓட. இனைபு-வருந்தி. உகும்-கெட்டழியும். உள்ளார்-நினையார். துனி-வெறுப்பு. இமிர்ந்து-ஆரவாரித்து. ஆனா-குறையாத. கவவி-தழுவி. துருத்தி-ஆற்றிடைக்குறை. வில்லவன்-காமவேள். வலனாக-வெற்றி பெறுக. நாவில் திரிதரும்-நாவால் புகழப்படும். புலன்நாவில்-புலவர்களுடைய நாவில். நாடும்-எண்ணி எண்ணி வருந்தும். உயவுநோய்-காமநோய். புள்இயல்-பறவைபோல் பறந்து பாயும் இயல்பு. பொருப்பன்-பொதிய மலைக்குரிய பாண்டியன்.

35.உயிர்க்கும் என் நெஞ்சு!

ணவன் வருவேன் எனக் கூறிச்சென்ற வேனிற்காலத்தில், வாராமை கண்டு மனைவி வருந்த, அவள் வருந்தம் கண்டு வருந்திய தோழி அவளுக்குக் கூறியது இது:

"கொடுமிடல் நாஞ்சிலான் தார்போல் மராத்து
நெடுமிசைச் சூழும் மயில்ஆலும் சீர,
வடிநரம்பு இசைப்பபோல், வண்டொடு கரும்புஆர்ப்பத்,
தொடிமகள் முரற்சிபோல் தும்பிவந்து இமிர்தர,
இயன்எழீஇய வைபோல எவ்வாயும் 'இம்' எனக், 5

கயன்அணி பொதும்பருள் கடிமலர்த் தேன்ஊத,
மலர்ஆய்ந்து வயின்வயின் விளிப்பபோல், மரன்ஊழ்ப்ப
இருங்குயில் ஆலப் பெருந்துறை கவின்பெறக்,
குழவிவேனில் விழவு எதிர்கொள்ளும்
சீரார் செவ்வியும் வந்தன்று; 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/106&oldid=1756578" இலிருந்து மீள்விக்கப்பட்டது