பக்கம்:கலித்தொகை 2011.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறிஞ்சிக் கலி

1. கொண்டான் மேல் கிடந்தேன்!

லைநாட்டு மங்கை ஒருத்தியும் அந்நாட்டு அழகன் ஒருவனும் ஒருவர்மீது ஒருவர் காதல் கொண்டனர். அவர் காதல் வளர்ந்தது. தான் கொண்ட காதல் தன் தோழிக்கும் தெரியாது என எண்ணியிருந்தாள் அப்பெண். ஆனால், தோழி அதை அறிந்திருந்தாள். ஆயினும், அதை அப்பெண் தன் வாயினாலேயே அறிவிக்க வேண்டும் எனக்கருதிய அத்தோழி, அப்பெண் அவள் காதலனோடு கலந்து ஆடிப்பாடிய நிகழ்ச்சிகள் அனைத்தையும், தானும் ஒரு ஆடவனைக் கண்டு காதல் கொண்டு நிகழ்த்தியதாக ஒருபெரிய பொய்யைக் கூறி, அவள் உள்ளத்தை அறிய முற்பட்டாள். அது இது:

"கயமலர் உண்கண்ணாய்! காணாய், ஒருவன்
வயமான் அடித்தேர்வான் போலத், தொடைமாண்ட
கண்ணியன், வில்லன் வரும்; என்னை நோக்குபு,
முன்னத்திற் காட்டுதல் அல்லது, தான் உற்ற
நோய் உரைக்கல்லான், பெயரும்மன் பன்னாளும் 5

பாயல்பெறேன், படர்கூர்ந்து, அவன்வயின்
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண்நின்று கூறுதல் ஆற்றான் அவனாயின்;
பெண்அன்று உரைத்தல் நமக்காயின்; இன்னதூஉம்
காணான், கழிதலும் உண்டு என்று, ஒருநாள் என் 10

தோள் நெகிழ்புற்ற துயரால் துணிதந்துஓர்
நாண்இன்மை செய்தேன்; நறுநுதால்! ஏனல்
இனக்கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்துஅயல்
ஊசல் ஊர்ந்துஆட, ஒருஞான்று வந்தானை,
'ஐய! சிறிது என்னை ஊக்கி' எனக்கூறத், 15

‘தையால்! நன்று' என்று அவன் ஊக்க, கைநெகிழ்பு,
பொய்யாக வீழ்ந்தேன் அவன்மார்பில்! வாயாச்செத்து,
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல்;
மெய்யறியா தேன்போல் கிடந்தேன்மன்; ஆயிடை
மெய்யறிந்து ஏற்றெழுவேனாயின், ஒய்யென 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/113&oldid=1757632" இலிருந்து மீள்விக்கப்பட்டது