கலித்தொகை - குறிஞ்சிக் கலி
115
அருள் வல்லான் ஆக்கம்போல் அணிபெறும்; அவ்வணி,
தெருளாமல் காப்பதோர் திறன்உண்டேல் உரைத்தைக்காண்;
மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்,
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை
திறன் சேர்ந்தான் ஆக்கம்போல் திருத்தகும்; அத்திருப்
20
புறங்கூற்றுத் தீர்ப்பதோர் பொருள் உண்டேல்
உரைத்தைக்காண்;
எனவாங்கு,
நின் உறுவிழுமம் கூறக்கேட்டு
வருமே தோழி! நன்மலை நாடன்,
வேங்கை விரிவிடம் நோக்கி,
25
வீங்குஇறைப் பணைத்தோள் வரைந்தனன் கொளற்கே."
இமயமலையாகிய வில்லை வளைத்த, கங்கை தங்கும் சடை முடியோனாகிய சிவன், உமையோடு கயிலைமலையில் இருந்தானாக, இராவணன், தொடி விளங்கும் பெரிய கையை, அம்மலைக் கீழ் நுழைத்து எடுக்க முயன்று, அதைப் பெயர்க்கவோ, கீழ் நுழைத்த தன் கையை எடுத்துக் கொள்ளவோ முடியாமல் வருந்தியதைப் போல் புலியின் உருவத்தை ஒத்த வேங்கை மரத்தைப் புலியெனக் கருதிச் சினங்கொண்டு குத்திய யானை, கடைசியில், அம்மரத்தில் ஆழப்பதிந்து விட்ட கொம்புகளை வாங்கிக் கொள்ள மாட்டாமல் வருந்தி, மலையெல்லாம் எதிரொலிக்குமாறு கூக்குரல் இடும் மலைநாட்டைச் சேர்ந்தவனே! நான் கூறுவதைக் கேட்பாயாக:
உன்னைக் காண முடியாமையால், நீர் அற்ற நிலத்தில் பயிர் வாடுவது போல் வருந்தியவள், நீ கடத்தற்கு அரிது என்று கருதாது அரவங்களுக்கும் அஞ்சாமல் வரக்கண்டதும், விடியற் காலையில், பெருமழை பெய்யப்பெற்ற விளைபுலம் போல் வனப்புறுவாள். அவ்வாறு அவள் பெறும் அழகு மீண்டும் அழிந்து விடாதபடி காக்கக் கூடிய வழி இருக்குமானால் அதை எங்களுக்குக் கூறுவாயாக!
உன்னைக் காண முடியாமையால், செல்வம் இல்லாதவன் இளமை சீரழிந்து போவது போல், அழகிழந்து போனவள், நீ, இருள் நிறைந்த இரவு என்றும் கருதாது, கேடுகண்டு அஞ்சாமல் வரக்கண்டதும், அருள் உள்ளம் உடையவன் செல்வம், நாள்தோறும் வளர்ந்து வளம் பெறுவதுபோல் வளம் பெறுவாள். அவ்வாறு அவள் பெறும் அவ்வனப்பினைக் காணும் இவ்வூர்