பக்கம்:கலித்தொகை 2011.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - குறிஞ்சிக் கலி

117


உள்ளத்திலும் காதல் அரும்பிற்று. ஆனால், பெண்ணைப் பெற்றவர், அவளை அவனுக்கு மணம் செய்து தர மறுத்து விட்டனர். அஃதறிந்த தோழி அவர் காதலைத் தாய்க்கு அறிவித்தாள். தாய், அதைத் தந்தை தமையன்மார்க்கு அறிவித்தாள். அவர்கள், தொடக்கத்தில் சிறிதே சினம் கொண்டனர் என்றாலும், இறுதியில் அம்மணத்திற்கு இசைந்தனர். அத்திருமணம் விரைந்து முடிவதற்காக, அப்பெண்ணும் அவள் தோழியும் குரவைக் கூத்தாடிக் குமரக் கடவுளை வழிபட்டனர். அது இது:

"காமர் கடும்புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
தாமரைக்கண் புதைத்து, அஞ்சி, தளர்ந்து, அதனோடு
                                                                                                 ஒழுகலால்
நீள்நாக நறும்தண்தார் தயங்கப் பாய்ந்து, அருளினால்
பூண் ஆகம் உறத்தழீஇப் போதந்தான் அகன்அகலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால் என் தோழி 5

அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே;
அவனுந்தான், ஏனல் இதணத்து அகிற்புகை உண்டு
                                                                                               இயங்கும்
வான்ஊர் மதியம் வரைசேரின், அவ்வரைத்
தேனின் இறால் என ஏணி இழைத்திருக்கும்
கான்அகல் நாடன் மகன்; 10

சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
வள்ளி கீழ்வீழா; வரைமிசைத் தேன் தொடா;
கொல்லை குரல்வாங்கி ஈனா; மலைவாழ்நர்
அல்ல புரிந்து ஒழுக லான்;
காந்தள் கடிகமழும் கண்வாங்கு இருஞ்சிலம்பின் 15

வாங்குஅமை மென்தோள் குறவர் மடமகளிர்
தாம்பிழையார், கேள்வர்த் தொழுது, எழலால், தம்மையரும்
தாம் பிழையார் தாம்தொடுத்த கோல்;
எனவாங்கு,
அறத்தொடு நின்றேனைக் கண்டு, திறப்பட 20

என்னையர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்;
அவரும், தெரிகணைநோக்கிச், சிலைநோக்கிக் காண்சேந்து,
ஒருபகலெல்லாம் உருத்தெழுந்து, ஆறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/118&oldid=1761960" இலிருந்து மீள்விக்கப்பட்டது