124
மா. இராசமாணிக்கனார்
தலைவி: தேனைக் குடித்து விட்டு மலரை மறந்து செல்லும் மலைச்சாரல் வண்டு போல், மகளிர் இன்பத்தை நுகர்ந்து விட்டு, அவரைக் கைவிடும் கொடியோனுக்குரிய மலையாய் இருந்தும், தேவ மகளிர், மலையில் பந்தாடி மகிழ்ந்ததால் உண்டான தளர்ச்சியைப் போக்க, குளிர்ந்த ஆழம்மிக்க அவன் மலையருவியில் வந்து நீராடுகின்றனரே! இவ்வதிசயத்திற்கு என்னென்பேன்?
தோழி: தன்னை வந்து அடைந்தவரை ஓர் இமைப் பொழுதும் விட்டுப் பிரியாத நம் தலைவனுக்குரிய மலையில் சோம்பி இருத்தலை அறியாத ஆண் யானை, தான் விரும்பும் பிடியானைக்கு, அது முதற் சூல் உற்றிருப்பதால் அக்காலத்து வேட்கையைத் தீர்க்க, அது விரும்பும், இனிய கரும்பை முறித்துத் தரும்.
- இவ்வாறு, நாம் அவன் மலையைப் பழித்தும் பாராட்டியும் பாடிய பாக்களை விரும்பிக் கேட்ட தலைவன், உள்ளம் மகிழ்ந்து புணரப் புணரப் பேரின்பம் தரும் உன் மார்பு மாண்புறுமாறு, மணத்திற்குரிய ஏற்பாடுகளோடு வந்து சேர்ந்தான்.
அகவினம்-உலக்கைப்பாட்டு. அமர்-விருப்பம். தகை-அழகு. குரல்-கதிர். முகை-அரும்பு. பகை இல்-மருந்து இல்லாத. பணை-மூங்கில். நரல்-ஒலிக்கும். விடர்அகம்-மலைப்பிளவு. பாடித்தை-பாடு. நறவு-தேன். கடுவன்-ஆண்குரங்கு. புரிவிரி-இதழ் விரியும். புதை துதை-மகரந்தம் நிறைந்த. ததைந்த-நெருங்கிய. கடுஞ்சூல்- முதற்கருவு. வயா-கருவுற்ற காலத்தில் பெண்டிற்கு உண்டாம் ஆசை.
உள்ளுறை: காந்தளின் தேன், கீழ்வீழ்ந்து தானே பாழாதல், தலைவியின் நலம், தலைவன் வாராக் கவலையால், அவன் வந்து வரைந்து கொள்வதற்கு முன்னரே கெடுதலாம். கடுவன், மந்தியைத் தா எனக் குறைகூறல், தலைவன், தலைவியின் பெற்றோரிடம் சென்று, தலைவியை மணம் செய்துதர வேண்டுதலாம். களிறு, பிடிக்குக் கரும்பைத் தருதல், தலைவன் தலைவியை மணந்து, அவள் கருவுற்ற காலத்து அவள் விரும்பும் பொருளைத் தேடிக் கொண்டுவந்து தருதலாம்.
5. மணம் நயந்தனன்!
குறவர் குலக்குமரி ஒருத்தியும், அவள் தோழியும் ஒருநாள் உலக்கைப் பாட்டுப் பாடவிரும்பினர். குமரியின் உள்ளம்