பக்கம்:கலித்தொகை 2011.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - குறிஞ்சிக் கலி

125


தன்னைக் காதலித்துக் கைவிட்டுத் திரியும் காதலன் கொடுமைகளையே எண்ணியிருந்தது. ஆதலின் அவள் பாடிய பாட்டெல்லாம் அவனைப் பழிப்பனவாகவே அமைந்தன. தோழி, அவன் நல்லியல்பை உணர்ந்தவள் ஆதலின், அவள், பாட்டெல்லாம் அவனைப் பாராட்டின. அவர் பாக்களைக் கேட்க நேர்ந்த அவன், அவர் உள்ளத்தை உணர்ந்து கொண்டான். உடனே தன்னூர்ப் பெரியோர்களோடு வந்து, அப்பெண்ணின் தந்தையை, மகளை மணம் செய்து தரும்படி வேண்டிக் கொண்டான். தந்தையும் அதற்கு இசைந்தார். மகிழ்ச்சிக்குரிய அச்செய்தியைத் தோழி அக்குமரிக்குக் கூறியது இது:

"பாடுகம்வா வாழி தோழி! வயக்களிற்றுக்
கோடு உலக்கையாக, நற்சேம்பின்இலை சுளகா
ஆடுகழை நெல்லை அறை உரலுள்பெய்து இருவாம்;
பாடுகம் வாவாழி தோழி! நல்தோழி! பாடுற்று;
இடிஉமிழ்பு இரங்கிய இரவுபெயல் நடுநாள் 5

கொடிவிடுபு இருளிய மின்னுச்செய் விளக்கத்துப்
பிடியொடு மேயும் செய்புன் யானை,
அடிஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்,
நெடுவரை ஆசினிப் பணவை ஏறிக்
கடுவிசைக் கவணையில் கல் கைவிடுதலின் 10

இறுவரை வேங்கையின் ஒள்வீ சிதறி
ஆசினி மென்பழம் அளித்தவை உதிராத்
தேன்செய் இறாஅல் துளைபடப் போகி
நறுவடி மாவின் பைந்துணர் உழக்கிக்
குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப் 15

பலவின் பழத்துள் தங்கும் மலைகெழு வெற்பனைப்
பாடுகம்வா வாழி தோழி! நல்தோழி! பாடுற்று;
இலங்கும் அருவித்து, இலங்கும் அருவித்தே;
வானின் இலங்கும் அருவித்தே தான்உற்ற
சூள்பேணான் பொய்த்தான் மலை. 20

பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ?
அஞ்சல் ஓம்பு என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ?
குன்றுஅகல் நல்நாடன் வாய்மையில், பொய்தோன்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/126&oldid=1764796" இலிருந்து மீள்விக்கப்பட்டது