126
மா. இராசமாணிக்கனார்
திங்களுள் தீத்தோன்றி யற்று.
இளமழை ஆடும்; இளமழை ஆடும்;
25
இளமழை வைகலும் ஆடும்; என்முன்கை
வளைநெகிழ வாராதோன் குன்று.
வாராது அமைவானோ? வாராது அமைவானோ?
வாராது அமைகுவான் அல்லன், மலைநாடன்
ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழல்கயத்துள்
30
நீருள் குவளை வெந்தற்று.
மணிபோலத்தோன்றும்; மணிபோலத்தோன்றும்
மண்ணா மணிபோலத் தோன்றும்; என் மேனியைத்
துன்னான் துறந்தான் மலை.
துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்;
35
தொடர்வரை வெற்பன் துறக்குவன் அல்லன்
தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பில்
சுடருள் இருள் தோன்றியற்று,
எனவாங்கு,
நன்றாகின்றால் தோழி! நம் வள்ளையுள்
40
ஒன்றிநாம் பாட, மறை நின்றுகேட்டருளி
மென்தோள் கிழவனும் வந்தனன்; நுந்தையும்
மன்றல் வேங்கைக் கீழ் இருந்து
மணம் நயந்தனன் நம்மலைகிழ வோற்கே."
தலைவி: தோழி! பலம் மிக்க யானையின் கொம்பே உலக்கையாக, சேப்பங்கிழங்கின் இலைகளே முறங்களாக, மூங்கில் நெல்லைப் பாறை உரலில் இட்டுக் குற்றியவாறே வள்ளைப் பாட்டுப் பாடுவோம். வருக!
தோழி: இடித்தும் மின்னியும், மழை பெய்யும் இடையாமத்தில், மின்னல் ஒளியிலே, பிடியோடு வந்து மேயும் யானையின் காலோசையைக் கேட்ட கணவன், மலைமீது நிற்கும் ஆசினிப் பலாவில் அமைந்த பரண்மீது ஏறி எறிந்த கவண்கல், மலைப்பிளவிலே நிற்கும் வேங்கையின் மலர்களைச் சிதறி, ஆசினிப் பலாவின் பழத்தைத் துளைத்து, சின்னஞ்சிறு பிஞ்சுகளைக் கொண்ட மாவின் கொத்துக்களை உலுக்கி, குலை தொங்கும் வாழையின் மடலைக் கிழித்துக் கடைசியில் பலாவின்