கலித்தொகை - குறிஞ்சிக் கலி
127
பழத்தினுள் சென்று அடங்கும் வளம்மிக்க பெரிய மலைநாடானாகிய நம் தலைவனைப் பாடுவோம் வருக!
தலைவி: தான் உரைத்த சூளுரையைப் பாதுகாக்காது பொய்க்கச் செய்பவனுக்குரிய மலையாயிருந்தும், சேய்மைக் கண் உள்ளாரும் காண விளங்கும் அருவிகளைக் கொண்டுளதே, இஃது என்ன வியப்போ?
தோழி: தலைவன், தான் உரைத்த சூளுரையைப் பொய்யாக்க உரியவனோ? 'அஞ்சாதே' என்று கூறி ஆட்கொண்ட மகளிரைக் காவாது கைவிட உரியவனோ? அவன் அத்தகையன் அல்லன். அகன்ற மலைநாட்டானாகிய அவன் கூறும் மெய்யுரையிலும் பொய் தோன்றுமாயின், அது, திங்களில் தீ தோன்றிய தன்மை போல் வியத்தற்குரியதே அல்லது, இயல்பாய் நிகழக் கூடியதன்று!
தலைவி: என் முன் கையில் கிடந்த வளைகள் கழன்று போகவும், வாராது வருத்தம் செய்யும் கொடியோனுக்குரிய மலையாய் இருந்தும், அவன் மலை மீது நீர் உண்ட இளம் மேகங்கள், எந்நாளும் உலாவுகின்றனவே; இஃது என்ன வியப்போ?
தோழி: நம் காதலன் உன்பால் வாராதிருக்கமாட்டான். அவன் அன்புள்ளத்தில் இத்தகைய கொடுமைகள் இடம் பெறுமானால், தண்ணீரில் மலர்ந்த குவளைமலர் அத்தண்ணீரிலேயே வெந்து போவதுபோல் வியத்தற்குரியதாகுமே அல்லது இயல்பாக நிகழக் கூடியதாகாது.
தலைவி: என் உடலைத் தழுவக் கருதாது துறந்து மறந்தவனுடைய மலையாயிருந்தும், அம்மலை, நீலமணிபோல் நின்று விளங்குகிறதே; இஃது என்ன வியப்போ?
தோழி: தொடர்ந்த சிறுமலைகள் பல நிறைந்த மலை நாட்டையுடைய நம் தலைவன், உன்னை மறந்து துறக்க மாட்டான்; அவன் காட்டும் உறவில், இதுபோன்ற கொடுமைகள் இடம் பெறுமாயின், அது ஞாயிற்றினிடத்தில் இருள் தோன்றிய தன்மைபோல் வியத்தற்குரியதாகுமே அல்லது, இயல்பாய் நிகழக் கூடியதாகாது.
இவ்வாறு, நாம் வள்ளைப் பாட்டுப்பாட, உன் தோளுக்கு உரிமை உடையோனாகிய அம்மலைநாடன், நாம் பாடியதை மறைந்து நின்று கேட்டு, வரைவுக்குரிய ஏற்பாடுகளோடு வந்து