கலித்தொகை - குறிஞ்சிக் கலி
131
இரும்-கரிய. மறக்கும்-மறப்பானாக. நற்கு-நன்கு. வெதிர்-மூங்கில். ஓர்வுஉற்று-ஆராய்ந்து. ஒல்காத-சாயாத. கொண்-பயன் இன்மை. கூரும் நோய்-மிக்க நோய். நெய்க்கண் இறால்-தேன் நிறைந்த தேனடை. எவ்வம்-துன்பம். உறீஇயினான்-தந்தவன்.
உள்ளுறை: புலியைக் கொன்று, கவலையற்று உணவு உண்டு, அருவி ஒலியில் யானை துஞ்சல், ஊரார் கூறும் அலரைக் கெடுத்து, அவனை மணந்து, இல்லறம் மேற்கொண்டு, சுற்றம் பாராட்டத் தலைவி இன்பம் நுகர்தலாம்.
7. மென்தோளும் வீங்கின!
பிரியேன் என வாக்களித்துத் தன் காதலைப் பெற்றுவிட்ட இளைஞன், பிரிந்துசென்று பன்னாளாகியும் வாராமை கண்டு வருந்தினாள் ஒரு பெண். அவள் மன இயல்பு அறிந்த அவள் தோழி, அவனை நேரில் காண இயலாதாயினும், அவன் புகழைக் கேட்கினும் அவள் துயர் தணியும் என உணர்ந்தாள். அதனால் இருவரும், உலக்கைப் பாட்டின் பொருளாக அவன் புகழைப் பாடினர். தான் எண்ணியவாறே அவள் தளர்ச்சி ஒருவாறு தீரக்கண்ட அவள், பிறிதொரு நாள் தன்னைக் காண வந்து, தன் மனைப்புறத்தே காத்திருந்த இளைஞன் காதில் படுமாறு, அந்நிகழ்ச்சியைக்கூறி, அவன் உள்ளத்தில் திருமண முயற்சியைத் தூண்டிவிட்டது இது:
“வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத்து
ஏந்து மருப்பின், இனவண்டு இமிர்பு ஊதும்
சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்,
ஐவன வெண்ணெல் அறைஉரலுள் பெய்து இருவாம்
ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற
5
மைபடு சென்னிப் பயமலை நாடனைத்
தையலாய்! பாடுவாம் நாம்;
தகையவர் கைச்செறித்த தாள்போலக் காந்தள்
முகையின்மேல் தும்பி இருக்கும், பகை எனின்,
கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத்
10
தோற்றலை நாணாதோன் குன்று?
'வெருள்புடன் நோக்கி வியல் அறை யூகம்,
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும்