பக்கம்:கலித்தொகை 2011.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - குறிஞ்சிக் கலி

133


இறங்கியும் ஆடிமகிழும் வளம் மிக்க மலைநாடனாகிய நம் தலைவனைப் புகழ்ந்து, நீ ஒரு பாட்டுப் பாடுவாயாக!

தலைவி: கல்வி, செல்வம் முதலியவற்றில் தன்னொடு பகைக்கொண்டு, தன் பெருவாழ்வு கண்டு மனம் பொறாக் கொடுமையுடையரேனும், அவர் குற்றத்தைப் பிறர்க்குக் கூறும் கொடுமையறியாத தலைவனுக்குரிய மலை, சிறுசிறு புள்ளிகளையுடைய மானின் காதுகள்போல், மூங்கில் முளைகளை மூடியிருக்கும் பாளைகள் கழன்று விழும் கவின் மிக்கதாகும்!

தோழி: பிடியானையோடு கூடி, வளகுத் தழையைத் தின்ற, கொம்புகளால் அழகு பெற்ற, மலை நடந்தாற் போல் நடந்து செல்லும் யானைகளை உடைய மலைநாடனை, மணம் வீசும் கூந்தலை உடையாய்! பாராட்டி மீண்டும் ஒரு பாட்டுப் பாடுவாயாக!

தலைவி: வறுமைத் துன்பத்தால் வந்து, தம் வறுமையைக் கூறி இரந்து நிற்பவர்க்கு, வேண்டுவன அளித்து அவர் வறுமையைப் போக்கமாட்டாத நிலை வரும்போது, உடலைத் துறந்து உயிர் இழந்து போகும் உயர்ந்த பண்பாடு மிக்க நம் தலைவனுக்குரிய மலையில், புலியின் கால் போல், வாழையின் வளைந்த காய்கள் குலைதோறும் தொங்கும்.

- என்று, நானும் அவளும் ஒன்று கலந்து அவனைப் பாட, என் உயிர்த்தோழியாகிய அப்பெண்ணுக்குக் காதலனைக் காணாமையால் வாடிய தோள்கள், அவள் காதலன் வந்து அன்பு காட்டிய பொழுது மகிழ்ந்து பருத்தல் போலவே, பருத்து அழகு பெற்றன.

வெறி-மதம். பொறி-புள்ளி. வாரணம்-யானை. இமிர்பு-ஒலித்து. இருவாம்-குற்றி. ஐயன்-முருகன். மை-மேகம். தகையவர்-மகளிர். தாள்-விரல் அணி. வெருள்பு-மருண்டு. யூகம்-கருங்குரங்கு. ஊர்பு இழிபு-ஏறி இறங்கி. தெருள-விளங்க. பாடித்தை-பாடு. வெதிர்-மூங்கில். தேற்றாதோன்-தெளியாதவன். வளகு-ஒருவகைத் தழை. வரைபுரை-மலையை ஒத்த. உழுவை-புலி. கொடுங்காய்-வளைந்த காய். அமை-மூங்கில்.

உள்ளுறை: காந்தள் மலரும் பருவம் நோக்கி வண்டு இருத்தல், மணத்திற்குச் சுற்றத்தார் மனம் நெகிழும் காலத்தை எதிர்நோக்கித் தலைவன் இருத்தல்; மான் கன்று, மருள வேண்டாத கருங்குரங்கைக் கண்டு மருளல், தலைவி, சுற்றத்தார் மணத்திற்கு உடம்படமாட்டார்களோ என மருளல்; பாளை உதிர்ந்து விடவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/134&oldid=1765882" இலிருந்து மீள்விக்கப்பட்டது