பக்கம்:கலித்தொகை 2011.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகை - குறிஞ்சிக் கலி

139


"வீயகம் புலம்ப, வேட்டம் போகிய
மாஅல் அம்சிறை மணிநிறத் தும்பி,
வாய் இழி கடாத்த, வான் மருப்பு ஒருத்தலோடு
ஆய்பொறி உழுவை தாக்கிய பொழுதில்,
வேங்கையஞ் சினை என, விறற்புலி முற்றியும் 5

பூம்பொறி யானைப் புகர்முகம் குறுகியும்,
வலிமிகு வெகுளியால், வாள்உற்ற மன்னரை
நயன்நாடி நட்புஆக்கும் வினைவர்போல் மறிதரும்,
அயம் இழி அருவிய, அணிமலை நன்னாட!
ஏறு இரங்கு இருளிடை இரவினில் பதம்பெறாஅன் 10

மாறினென் எனக்கூறி மனங்கொள்ளும் தான் என்ப;
கூடுதல் வேட்கையால் குறிபார்த்துக் குரல் நோச்சிப்
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யானாக;
அருஞ்செலவு ஆரிடை அருளிவந்து அளிபெறாஅன்
வருந்தினென் எனப்பல வாய்விடூஉம் தான் என்ப; 15

நிலை உயர் கடவுட்குக் கடம்பூண்டு தன்மாட்டுப்
பலசூழும் மனத்தோடு பைதலேன் யானாக;
கனைபெயல் நடுநாள் யான் கண் மாறக் குறிபெறாஅன்
புனையிழாய்! என்பழி நினக்கு உரைக்கும் தான் என்ப
துளிநசை வேட்கையால் மிசைபாடும் புள்ளில்தன் 20

அளிநசைஇ யார்வுற்ற அன்பினேன் யானாக;
எனவாங்கு,
கலந்தநோய் கைம்மிகக் கண்படா என்வயின்,
புலந்தாயும் நீ ஆயின் பொய்யானே வெல்குவை;
இலங்குதாழ் அருவியோடு அணிகொண்ட நின்மலைச் 25

சிலம்பு போல் கூறுவ கூறும்
இலங்கு ஏர் எல்வளை இவளுடை நோயே."

இருந்து தேன் உண்ட பூ, தனித்துக்கிடக்க அதை விட்டு, வேறு புதுப்பூக்களைத் தேடிச் சென்ற அழகிய நீல மணி போன்ற நிறம் பெற்ற தும்பி, வழியும் மதநீரையும், பெரிய கொம்புகளையும் உடைய யானைத்தலைவனோடு, புலி போர் செய்யும் பொழுது, வேங்கை மரக்கிளை என்று கருதிப் புலியை அணுகியும், மத நீர் மணத்தால் யானையின் மத்தகத்தை அடைந்தும், படைப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/140&oldid=1771579" இலிருந்து மீள்விக்கப்பட்டது