பாலைக் கலி
1. பிரியாமை பொருள்!
ஓர் இளைஞன் பொருளீட்ட வெளிநாடு செல்லக்கருதினான். அவனைப் பிரிந்து வாழமுடியாத அவன் இளம் மனைவி, அவன்
கருத்தறிந்து வருந்தினாள். அவன் போகா முன்பே வருந்தும் அவள், அவன் போய்விட்டால் இறந்து விடுவாளோ என அஞ்சிய அவள் தோழி, இளைஞனுக்கு அவன் மனைவி வருந்துவதைக் கூறி அவன் கருத்தை மாற்றினாள். இவ்வாறு அவனைப் போகாது நிறுத்தி விட்டதை, அவள், அவன் மனைவிக்குக் கூறி, அவள் துயரை மாற்றியதைக் கூறுவது இது:
"தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல்சாய, அமரர்வந்து இரத்தலின்
மடங்கல்போல் சினைஇ, மாயம்செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூஎயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்,
5
சீறரும் கணிச்சியோன் சினவலின், அவ்எயில்
ஏறுபெற்று உதிர்வனபோல் வரைபிளந்து இயங்குநர்
ஆறுகெட விலங்கிய அழல்அவிர் ஆரிடை
மறப்பரும் காதல் இவள்ஈண்டு ஒழிய,
இறப்பத் துணிந்தனிர்; கேண்மின் மற்று ஐஇய!
10
தொலைவாகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவுஎன
மலைஇறந்து செயல்சூழ்ந்த பொருள் பொருளாகுமோ?
நிலைஇய கற்பினாள்; நீநீப்பின் வாழாதாள்
முலையாகம் பிரியாமை பொருளாயின் அல்லதை;
இல்லென இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவுஎனக்
15
கல்இறந்து செயல்சூழ்ந்த பொருள் பொருளாகுமோ?
தொல்இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள்