30
மா. இராசமாணிக்கனார்
ஆகிய மூன்று கோட்டைகள். உடன்றக்கால்- சினந்து நோக்கிய பொழுது. ஒன்கதிர்-தீயைக் கக்கும் ஞாயிறு. தெறுதலின்-சுடுவதால். கணிச்சியோன்-மழுவேந்திய சிவன். ஏறுபெற்று-அழிந்து. வரை-மலை. அழல் அவிர் ஆர் இடை-அழல்வீசும் செல்லுதற்கரிய வழி. இறப்ப-பொருள் கருதிப் பிரிய. இறந்து-கடந்து. கல்-மலைநாடு. புல் ஆகம்-தழுவுதற்கு இனிய மார்பு. கடன்-காடு சேர்ந்த நிலம். வயங்கிய-பிறரால் போற்றுதற்குரிய. தடமென்தோள்-பெரிய மெல்லிய தோள். புன்கண்-துன்பம். இனையவும்-வருந்தவும். காழ்-குத்துக்கோல். கடுங்களிற்று ஒருத்தல்-மதம் மிக்க யானைத் தலைவன்.
2. கானம் தடுக்கும்!
அண்மையில் மணம் செய்துகொண்ட இளைஞன் ஒருவன் வெளிநாடு சென்று பொருளீட்டிவர விரும்பினான். அதை அறிந்த அவன் மனைவியின் தோழி, "அன்ப! நீ போய் விட்டால் உன் மனைவி பெரிதும் வருந்துவாள்; ஆதலின் போகாதே; மீறிப் போவாயானால், வழியில் நீ காணும் காட்சிகள் உன்னைப் போகவிடாது தடுத்து விடும்; போய் வறிதே மீள்வதினும் போகாதிருப்பதே நன்று” எனக்கூறி, அவன் போக்கைத் தடை செய்தது இது:
"அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்,
வறன் நீந்தி நீசெல்லும் நீள்இடை நினைப்பவும்,
இறைநில்லா வளைஓட, இதழ் சோர்வு பனி மல்கப்,
பொறைநில்லா நோயோடு புல்என்ற நுதல்இவள்
விறல்நலன் இழப்பவும் வினைவேட்டாய்! கேளினி;
5
உடைஇவள் உயிர்வாழாள் நீநீப்பின் எனப்பல
இடைகொண்டு யாம் இரப்பவும் எமகொள்வாய் ஆயினை;
கடைஇய ஆற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை
அடையொடு வாடிய அணிமலர் தகைப்பன;
வல்லைநீ துறப்பாயேல் வகைவாடும் இவள்என
10
ஒல்லாங்கு யாம்இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை;
செல்லும் நீள் ஆற்றிடைச் சேர்ந்துஎழுந்த மரம்வாடப்
புல்லுவிட்டு இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன;
பிணிபு நீ விடல்சூழின் பிறழ்தரும் இவள் எனப்
பணிபுவந்து இரப்பவும் பலசூழ்வாய் ஆயினை;
15