கலித்தொகை - பாலைக் கலி
33
"வலிமுன்பின் வல்லென்ற யாக்கைப் புலிநோக்கின்,
சுற்றமை வில்லர், சுரிவளர் பித்தையர்,
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர், தாம்
கொள்ளும் பொருளிலர் ஆயினும், வம்பலர்,
துள்ளுநர்க் காண்மார், தொடர்ந்து உயிர்வௌவலின்,
5
புள்ளும் வழங்காப் புலம்புகொள் ஆரிடை
வெள்வேல் வலத்திர் பொருள்தரல் வேட்கையின்
உள்ளினிர் என்பது அறிந்தனள் என்தோழி;
'காழ்விரி வகையாரம் மீவரும் இளமுலை
போழ்துஇடைப் படாஅமல் முயங்கியும் அமையார், என்
10
தாழ்கதுப்பு அணிகுவர் காதலர்; மற்றுஅவர்
சூழ்வதை எவன்கொல்? அறியேன்!' என்னும்;
'முள்உறழ்முளை எயிற்று அமிழ்து ஊறும்தீ நீரைக்
கள்ளினும் மகிழ்செயும் எனஉரைத்தும் அமையார், என்
ஒள்இழை திருத்துவர் காதலர்; மற்றுஅவர்
15
உள்ளுவது எவன்கொல்? அறியேன்!' என்னும்,
'நுண்எழில் மாமைச் சுணங்கு அணிஆகம் தம்
கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையார்; என்
ஒள்நுதல் நீவுவர் காதலர்; மற்றுஅவர்
எண்ணுவது எவன்கொல்? அறியேன்!' என்னும்;
20
எனவாங்கு
'கழிபெரும் நல்கல் ஒன்று உடைத்து' என என்தோழி
அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒருநாள் நீர்
பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ?
ஒழிகஇனிப் பெரும! நின்பொருட்பிணிச் செலவே."
25
உடல் உரமும், அது நிற்றற்கேற்ற உறுதியான உடம்பும், புலிப்பார்வை போலும் பார்வையும், முறுக்கிக் கட்டிய வில்லும், சுருண்டு வளர்ந்த மயிரும் உடையராய், வழிப்போவாரின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கும் ஆறலைகள்வர், வருவோரிடத்தில், கவர்ந்து கொள்ளக் கூடிய பொருள் எதுவும் இல்லையாயினும் அவ்வழி வரும் புதியோர், துயர் உற்றுத் துடிப்பதைக் கண்டு மகிழ்வதற்காகவே, அவரைப் பின் தொடர்ந்து சென்று அவர் உயிரைக் கவர்வதால், பறவைகளும் பறக்க அஞ்சும் கடத்தற்கு அரிய அத் தனிவழியில் வெண்ணிறம்