கலித்தொகை - பாலைக் கலி
35
கதுப்பு-தலைமயிர். நுண்எழில்-பேரழகு. மாமை-மகளிர் மேனிக்கு அழகுதரும் பொன்னிறம். சுணங்கு-அழகிய தேமல். கழிபெரும்நல்கல்-மிக்க பேரன்பு. அழிவு-உள்ளத்துயர். எவ்வம்-வருத்தம்.
4.நீ நீப்பின் வாழ்வாளோ?
தலைவன் ஒருவன் பொருளீட்டிவரப் புறநாடு செல்லக் கருதினான்; அதை அவன் மனைவியின் ஆருயிர்த் தோழி அறிந்து கொண்டாள்; கணவன் பிரிந்தால் கணப்பொழுதும் வாழாக் காதல் உடையவள் அப்பெண் என்பதை அறிந்தவள் அத்தோழி; அதனால் அவள் அவனை அணுகி, "அன்ப! உன்னை அடைந்து பெருவாழ்வு பெற்றவள், உன்னைப் பிரிய நேரின் உயிர் பிரிந்து விடுவாள்; ஆகவே, நீ பாடுபட்டுச் சேர்க்கும் பொருளைக் காட்டிலும் நாங்கள் சிறந்தவர்களானால், இடைவழியில் ஆகாத நிமித்தங்கள் தோன்றி உன்னைத் தடை செய்யுமாக" எனக் கூறி அவன் போக்கைத் தடை செய்தது இது:
"பாஅல் அம்செவிப், பணைத்தாள், மாநிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கித்
தூறு அதர்பட்ட ஆறுமயங்கு அருஞ்சுரம்,
இறந்து நீர்செய்யும் பொருளினும், யாம்உமக்குச்
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின்,
5
நீள்இரும் முந்நீர் வளிகலன் வௌவலின்,
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக்
கேள்பெருந் தகையோடு எவன்பல மொழிகுவம்?
நாளும் கோள்மீன் தகைத்தலும் தகைமே;
கல்எனக் கவின்பெற்ற விழவு ஆற்றுப் படுத்தபின்
10
புல்லென்ற களம்போலப் புலம்புகொண்டு அமைவாளோ?
ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோல்
பாழ்பட்ட முகத்தோடு பைதல்கொண்டு அமைவாளோ?
ஓர்இரா வைகலுள் தாமரைப் பொய்கையுள்
நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ?
15
எனவாங்கு,
பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு