பக்கம்:கலித்தொகை 2011.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மா. இராசமாணிக்கனார்


நீ, தனியே பிரிந்து போக வேண்டியுள்ளதே என்று நினைந்து வருந்தாத நெஞ்சோடே, பொருளைத் தேடப் போகத் துணிந்து, இடைவழியில் துணையாகுக என்று கருதிச் சக்கரப் படையின் முனையை மாசு போகத் துடைக்கத் தலைப்பட்டாய்; ஆனால், அதைக் கண்டு கொண்ட உன் மனைவிக்குக் காற்றில் ஆடி அசையும் மெல்லிய இதழ்களைக்கொண்ட காந்தட்பூவின் இதழ்கள் உதிர்வன போல், அழகிய ஒளிவீசும் கைவளைகள், முன்கையில் நிற்கமாட்டாது கழன்று விழத் தொடங்கிவிட்டன. அவள் உடல் அதற்குள்ளாகவே தளரத் தொடங்கிவிட்டது!

நீ செல்லத் துணிந்து விட்டாய் என்பதை அறிந்தே இவ்வாறு வருந்தும் அவள், செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நீ மேற்கொள்வதைக் கண்டே வருந்தும் அவள், நீ பிரிந்து விட்டால் தன் நலம் அனைத்தையும் இழந்து அழிவது உறுதி.

ஆதலின், நீ விரும்பிச் செல்லும் நாட்டில் நீ அரிதின் முயன்று தேடும் பொருள், வாழ்வில் இன்பம் தருதலோடு அழிந்து போகும் இவள் உயிரைமீட்டுத் தருமோ? அப்பொருளுக்கு அவ்வாற்றல் இருந்தால், பொருள் ஈட்டப்போவாயாக!

வேனில்-கோடை. உழந்த-வருந்திய, வறிது உயங்கு-உடல் சுருங்க வருந்தும். ஓய்-ஊக்கம் கெட்ட. வான்-மழை. வைப்பு-ஊர்கள். வழங்காத்தேர்-கானல்நீர். அவாஅம்-விரும்பும். உசாவுகோ-கேட்கட்டுமா? அயர்ந்து-விரும்பி. மண்டிலம்-திங்கள். மையாப்பது-மேகம் பரவுவது. காழகம்-கையுறை. தெரிதல்-ஆராய்தல். கார் எதிர்தல்-மழையை எதிர்நோக்கி நீர் சொரிதல். இனை நோக்கு-வருந்தும் பார்வை. புலம்பு இல் உள்ளம்-பிரிகின்றோம் என எண்ணி வருந்தா உள்ளம். திகிரி-ஆழிப்படை. நீவுதி-துடையா நின்றாய். கோடல்-வெண் காந்தள். வீ-இதழ்கள். எல்-ஒளி. இறை-முன்கை. ஊரும்-ஓடும். இனையவள்-துயர் கொள்வாள். தன்நலம் கடைகொள்ளப் படுதல்-இறத்தல்.


7.கூடல் பொருள்

பொருள் வேட்கைமிக்க ஓர் இளைஞன் அப்பொருளைத் திரட்டப் புறநாடு செல்ல விரும்பினான். விரும்பியவன், தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/41&oldid=1737220" இலிருந்து மீள்விக்கப்பட்டது