பக்கம்:கலித்தொகை 2011.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு செய்திகள்

லித்தொகை முதலில் வெளியிட்ட திரு.சி.வை.தாமோதரன் பிள்ளை அவர்கள், இந்நூல் இயற்றியோர் ஒருவரே எனக்கருதினர். அதன்பின்,

"பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி,
மருதனிள நாகன் மருதம்-அருஞ்சோழன்
நல்லுத் திரன்முல்லை, நல்லந் துவன்நெய்தல்
கல்விவலார் கண்ட கலி"

என்னும் வெண்பா வெளிப்பட்டது. அது முதல் ஐந்து கலியும் புலவர் ஐவரால் பாடப்பட்டவை எனத் தமிழறிஞர் கருதலாயினர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித் துறைப் புலவராக இருந்த திரு.K.N.சிவராசப் பிள்ளை, B.A. அவர்கள், 'கலித்தொகை ஆசிரியர் ஒருவரே' என முடிவு கட்டினர். இந்நிலைமையில், கலித்தொகை ஆசிரியர் ஒருவரா? ஐவரா? என்பதைத் துணிதல் நமது கடமை அன்றோ?

ஐவர் அல்லர்: காரணங்கள்

1. கலித்தொகை ஆசிரியர் ஐவரே என்பதற்கு மேற்காட்டிய வெண்பாவைத் தவிர வேறு சான்று இல்லை. எனவே, அவ்வெண்பா நம்பத்தக்கதா என்பதை முதற்கண் ஆராய்தல் வேண்டும்.

1. பாலைக் கலியைப் பாடியவர்-பெருங்கடுங்கோன்

2. குறிஞ்சிக் கலியைப் பாடியவர்-கபிலர்

3. மருதக் கலியைப் பாடியவர்-மருதன் இளநாகனார்

4. முல்லைக் கலியைப் பாடியவர்-சோழன் நல்லுருத்திரன்

5. நெய்தற் கலியைப் பாடியவர்-நல்லந்துவனார்

என்பது அவ்வெண்பாவில் உள்ள செய்தி. ஏனைய தொகை நூல்களில் பாலைத் திணை பற்றிப் பல செய்யுட்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/6&oldid=1669589" இலிருந்து மீள்விக்கப்பட்டது