60
மா. இராசமாணிக்கனார்
முன்பு கொண்டிருந்த நட்புத் தொடர்பை அறுத்துக்கொண்டு உனக்குப் பகையாகி விட்டவர் நாட்டிற்குப் படையோடு சென்று பெறும் அரச செல்வத்தால் மாற்ற முடியுமோ? முடியுமானால் நீ பிரிந்து செல்க!
ஆகவே, அன்ப! அவள் மேனி நலம், முகநலம், கண்ணின் கவின் ஆகியவற்றின் இயல்பையும், நீ பெற விரும்பும் பொருள், கல்வி, பேராண்மைகளால் ஆகும் புகழின் இயல்பையும் ஆராய்ந்து காண்பாயாக! செல்வமோ என்றால், என்று விரும்பினாலும் ஈட்டக்கூடிய இயல்புடையதாகும்; ஆனால். மூங்கில் முளையை வென்ற, வரிசையாக முளைத்து நிற்கும் இனிய முறுவலை வெளிப்படுத்தும் மகளிர் அனைவரிலும் சிறந்தவள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட உன் மனைவியின் இளமை, அச்செல்வம் போல், வேண்டும்போது பெற்றுக்கொள்ளத் தக்கதோ, இழந்தால் மீட்டுக்கொள்ளத் தக்கதோ அன்று!
அரிமான்-சிங்கம். புரிநாண்-முறுக்குண்ட நாண். புடையின்-தெறித்து எழுப்பும் ஒலியால். இணைப்படை-ஒன்று சேர்ந்த பல படை. கணை-அம்பு. எருத்து-கழுத்து. எறுழ்நோக்கு-வலிய பார்வை. இரலை-கலைமான். மறிந்து-முறுக்குண்டு. உருத்த-கொடிய. புறமாறிய-இல்லாமற்போன. புறம்புரிபு-புறப்பொருளை விரும்பி. செயலை-அசோகு. புரையோர்-உயர்ந்தோர். படர்ந்து-சென்று வழிபட்டு. படிவம்-ஒழுக்கநெறி. பின்னிய-பிணைத்த. நீவி-அறுத்துவிட்டு. மன்னிய புணர்ச்சி-இறவாப் புகழ். புரிஅவிழ்-மலர்ந்த. தெண்பனி உறைத்தல்-தெளிந்த நீரைத் துளித்தல். அனையவை-கூறியவற்றை. நினை இயன-நினைந்து தேடுவன.
15. தேமொழி, தெருமரல்!
முதன் முதலாகக் கண்டு காதல் கொண்டபோது, 'உன்னை என்றும் பிரியேன்' என்று தான் உரைத்த உறுதிமொழியை நம்பித் தன்னை மணந்து கொண்டவள், இன்று தான் பிரிந்துவிட்டால் வருந்துவாள் என்று எண்ணாமல், ஓர் இளைஞன், மனைவியை மனையில் விடுத்துப் பொருள் தேடப் போய்விட்டான். அப்பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாது வருந்திய அவன் மனைவி, 'இயல்பாகவே கொடுமைகள் மலிந்தது காட்டு வழி; மேலும்,