பக்கம்:கலித்தொகை 2011.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

63


காக, இவை போன்ற தெய்வங்களை வழிபடுவோமா என்று எண்ணி ஏங்காதே. இனி அதற்குத் தேவையும் இல்லை. உலகில் மழை இன்மையால் வறண்டு பஞ்சம் வந்துறுமாயின், அவ்வுலகில் மழையைக் கொண்டு வந்து தரும் விழுமிய கற்புடையாள் வருந்தித் தன் அழகிழந்து போவாளோ என்று உன் ஆற்றல் கண்டு அஞ்சிய அறக்கடவுள், கணவர் மேற் கொண்ட முயற்சிக்கு, இடைபுகுந்து துணைபுரிந்து அதனால், அவர் வினையை விரைவில் முடித்துக்கொண்டு வந்துவிட்டார்!

பாடு-உறக்கம். பைதல-வருத்தம் உடையவாகி. வாடுபு-கெட்டு. வனப்பு ஓடி-அழகு கெட்டு. இறை-முன்கை. ஆடுஎழில்-பேரழகு. துன்னி-பொருள்மேல் ஆசைகொண்டு. புலம்புஉற-வருந்த. முன்னிய-போகக் கருதிய. கனலி-ஞாயிறு. அளி ஒரீஇ-அன்பைக் கைவிட்டு. முளி-உலர்ந்த புதர். தெருமரல்-மனங்கலங்காதே. ஓடின்-சென்று பரவின். நிறன் ஓடின்-நிறம் கெடின். அறன்-அறக்கடவுள்.


16. மீளி பெயர்ந்தனன்!

ரசன் ஒருவன், தனக்கு அடங்கிய சிற்றரசனுடைய நாட்டு அமைதியை நிலைநாட்டுவதற்காக அந்நாடு செல்லக் கருதினான். அது அறிந்து வருந்தினாள் அவன் மனைவி. அவள் வருத்தம கண்டு வருந்திய தோழி, அவ்வரசனைக் கண்டு, பிரிந்தால் அவன் மனைவிக்கு உண்டாகும் கேட்டை அறிவுறுத்தி, அவன் போக்கைத் தடை செய்து, மகிழ்ச்சிக்குரிய அச்செய்தியை அவன் மனைவிக்குக் கூறியது இது:

"படைபண்ணிப் புனையவும், பாமாண்ட பயில் அணைப்
புடைபெயர்ந்து ஒடுங்கவும், புறஞ்சேர உயிர்ப்பவும்,
உடையதை எவன்கொல் என்று ஊறுஅளந்து, அவர்வயின்
நடைசெல்லாய், நனிஏங்கி நடுங்கல் காண் நறுநுதால்!
தொல்லெழில் தொலைபு இவள் துயர்உழப்பத், துறந்துநீ 5

வல்வினை வயக்குதல் வலித்திமன்; வலிப்பளவை,
நீள்கதிர் அவிர்மதி நிறைவுபோல் நிலையாது
நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ?
ஆற்றல்நோய் அடஇவள் அணிவாட அகன்றுநீ,
தோற்றம்சால் தொகுபொருள் முயறிமன்; முயல்வளவை 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/64&oldid=1737229" இலிருந்து மீள்விக்கப்பட்டது