74
மா. இராசமாணிக்கனார்
தரும்போது அவருக்கிருக்கும் முகமும் வேறுபடுதல், பண்டைக் காலத்திலும் இவ்வுலகத்தவர்க்கு இயல்பாகும். அவ்வியல்பு, இக்காலத்தவர்க்கும் புதியதன்று.
தன்னைப் பண்ணிய ஒருவனால் உயிர் ஊட்டப் பெற்ற பாவை போலும் பெருநலம் உடைய மகளிர், வாக்குறுதியில் என்றும் தவறுவதில்லை. மலர்தோறும் தேன் தேடிச் சென்றுண்ணும் இயல்புடைய தேனீக்கள் போல் இவளிடத்தில் நலத்தை நுகர்ந்து, அதற்குக் கைம்மாறாக சாக்காட்டைக் கொடுக்கத் தாங்கள் முன்வரும் பொழுது அதற்குக் காரணமான உம் பொருளாசை குறித்து, உம்மோடு முன்பு கொண்ட உறவை இழந்து விட்ட நாங்கள் என்ன கூற முடியும்?
ஐய! நறுமணம்மிக்க முல்லைக்கொடியில் வரிசையாக நிற்கும் அரும்புகளைப் போல் வரிசையாக முளைத்த பற்களைப் பெற்றிருந்த எங்கள் இளமை அழகைப் பாராட்டியுள்ளாய். அவ்வழகைப் பாராட்டிய நீ, அப்பற்கள் உதிர்ந்துபோகும் எம் முதுமை அழகைப் பாராட்டினாயோ? இல்லையே!
ஐய! நெய் பூசி வாரிமுடித்த, நீலமணி போன்ற நிறம் பெற்று ஐவகையாகப் பின்னிவிடப்பட்ட எங்கள் கூந்தலின் இயற்கை அழகைப் பாராட்டியுள்ளாய். அதைப் பாராட்டிய நீ, நாங்கள் முதுமையுற்றுப் போவதால் இயற்கை அழகை இழந்து போன அதற்கு நாங்கள் செய்யும் செயற்கை அழகைப் பாராட்டினாயோ? இல்லையே!
ஐய! குளத்திற்கு அழகு செய்யும் தாமரையின் இளம் அரும்பை ஒத்த எங்கள் இளங்கொங்கைகளைப் பாராட்டியுள்ளாய். அவற்றைப் பாராட்டிய நீ, நாங்கள் முதுமையுற்றுப் போக, அவை மார்பில் நிற்காது தளர்ந்து தொங்கும் நிலையைப் பாராட்டினாயோ? இல்லையே!
அன்று எங்கள் இளமை நலங்களைப் பாராட்டிய நீ, இப்போது பிரிந்து போய் விடுவதால் எங்கள் முதுமை நலங்களைக் கண்டு பாராட்டுவது உன்னாலும் இயலாது; உன் பிரிவுத் துயரைத் தாங்கி நாங்கள் முதுமையடையும் வரை வாழ்வது எம்மாலும் இயலாது; அத்துயர் தாங்கி வாழும் ஆற்றல் எமக்கு இல்லாமையால் எம் இளமை எம்மை விட்டுக் கழிவதற்கு முன்பே, எம் உயிர் எம்மை விட்டுக் கழிந்துவிடும்.
ஐய! எம் இன்பத்தை நுகர்ந்து கொண்டிருக்கும் போதே, அதை நுகர முடியாத தீவினை வந்து உன்னைப்பற்றிக் கொண்ட