பக்கம்:கலித்தொகை 2011.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

75


காரணத்தால், அடித்து நீட்டிய பொன்போன்ற நிறம் பெற்ற எம் தேமல் அழகுகெட்டழியும்படி, ஞாயிறு காயும் காட்டு வழியைக் கடந்து போகத் துணிந்த உன்னைத் தடுத்து நிறுத்த எம்மிடம் என்ன உளது? ஒன்றும் இல்லை.

வழிமொழிந்து-பணிவாகப் பேசி. புலன்உடை மாந்திர்-அறிவுடைய மக்களே. தாவார்-உறுதி கெடார். இறல்-இறப்பு. நேர்முகை-வரிசையான அரும்புகள். நிரைத்த-வரிசையாக அமைந்த. செறிமுறை-செறிந்து நிற்கும் பற்களை. பறிமுறை-வீழ்ந்துபோகும் நிலை. மணி-நீல மணி. பாசரும்பு-இளைய அரும்பு. ஏய்க்கும்-ஒக்கும். அடர்பொன்-தகட்டுப் பொன். அவிர்-ஒளி. படர்கூற-துன்பத்தைச் சொல்ல. துவ்வாமை-தீவினை.


22. சூடினர் இட்ட பூ!

னையறம் நடைபெறுவதற்கு வேண்டிய மாநிதிஈட்ட, அது கிடைக்கும் வெளிநாடு செல்ல விரும்பினான் கணவன். என்னையும் உடன் கொண்டு செல் என வேண்டிக்கொண்டாள் மனைவி. அதை ஏற்றுக்கொள்ளாது, தனியே செல்வதையே விரும்பினான் அவன். அங்ஙனமாயின் நான் இறந்து விடுவேன் என்றாள் அவள். அது இது.

"இலங்குஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்,
புலங்கடி கவணையின் பூஞ்சினை உதிர்க்கும்
விலங்குமலை வெம்பிய போக்கரு வெஞ்சுரம்
தனியே இறப்ப, யான்ஒழிந் திருத்தல்,
நகுதக்கன்றுஇவ் அழுங்கல் ஊர்க்கே; 5

இனியான்,
உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன்;
தோள்நலம் உண்டு துறக்கப் பட்டோர்,
வேணீர் உண்ட குடை ஓர்; அன்னர்;
நல்குநர் புரிந்து நலன்உணப் பட்டோர் 10

அல்குநர் போகிய ஊர் ஓர்; அன்னர்;
கூடினர் புரிந்து குணன்உணப் பட்டோர்,
சூடினர் இட்ட பூ ஓர்; அன்னர்;
எனவாங்கு,
யானும் நின்னகத்து அனையேன், ஆறாது 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/76&oldid=1737250" இலிருந்து மீள்விக்கப்பட்டது