கலித்தொகை - பாலைக் கலி
79
முளிகழை உயர்மலை முற்றிய முழங்குஅழல்
ஒள்ளுரு அரக்குஇல்லை, வளிமகன் உடைத்துத், தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப்போகு வான்போல,
எழுஉறழ் தடக்கையின் இனம்காக்கும் எழில்வேழம்,
அழுவம்சூழ் புகைஅழல் அதர்பட மிதித்துத், தம்
10
குழுவொடு புணர்ந்துபோம் குன்றுஅழல் வெஞ்சுரம்
இறத்திரால், ஐய! மற்று இவள்நிலைமை கேட்டீமின்;
மணக்குங்கால் மலரன்ன தகையவாய்ச் சிறிதுநீ
தணக்குங்கால் கலுழ்புஆனாக் கண்ணெனவும்
உளவன்றோ?
சிறப்புச் செய்து, உழையராப், புகழ்போற்றி மற்றுஅவர்
15
புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல்
ஈங்குநீர் அளிக்குங்கால், இறைசிறந்து ஒருநாள் நீர்
நீங்குங்கால் நெகிழ்போகும் வளைஎனவும் உளவன்றோ?
செல்வத்துள் சேர்ந்து அவர் வளன்உண்டு, மற்றவர்
ஒல்கிடத்து உலப்பிலா, உணர்விலார் தொடர்புபோல்;
20
ஒருநாள்நீர் அளிக்குங்கால், ஒளிசிறந்து, ஒருநாள்நீர்
பாராட்டாக் கால்பசக்கும் நுதல்எனவும் உளவன்றோ?
பொருந்திய கேண்மையின் மறைஉணர்ந்து, அம்மறை,
பிரிந்தக்கால் பிறர்க்குஉரைக்கும் பீடிலார் தொடர்புபோல்;
எனவாங்கு,
25
யாம் நிற்கூறுவது எவன்உண்டு? எம்மினும்
நீநற்கு அறிந்தனை; நெடுந்தகை! வானம்
துளிமாறு பொழுதின்இவ் வுலகம் போலும், நின்
அளிமாறு பொழுதின்இவ் ஆய்இழை கவினே."
புகழ்மிக்க வடநாட்டு மொழியால், திருதராட்டிரன் என்று பெயர் பெற்றவனுடைய மக்கள் நூற்றுவருள், துரியோதனன் சூழ்ச்சியால், ஐவர்கள் என்று உலகத்தவரால் புகழ்ந்து பாராட்டப் பெறும் பாண்டவர்கள் உள்ளே இருக்க, அரக்கு மாளிகையை நெருப்புச் சூழ்ந்து கொண்டதுபோல், செருக்கிக் களிக்கும் மதங்கொண்ட களிறுகள் உள்ளே அகப்பட்டுக்கொள்ள, மூங்கில்களைக் கொண்ட மலையில் பற்றி எரியும் பெருந்தீயை, அவ்வரக்கு மாளிகையைக் காற்றுக் கடவுள் பெற்ற