பக்கம்:கலித்தொகை 2011.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

81


சேர்ந்து வாழும் பொழுது. தணக்குங்கால்-பிரியும் பொழுது. புறக்கொடை-இல்லாத போது. ஒல்கிடத்து-வறுமை உற்றக்கால். உலப்பிலா-உதவாத. துளி-மழை. அளி-அன்பு.


25. வாய்மொழித் தூதே!

ரசிளங் குமரன் ஒருவன் நாட்டைக் காக்கும் கடமை மேற்கொண்டு சென்றிருந்தான். இளவேனிற் பருவம் வந்து விட்டது. அப்பருவத்து இன்பங்களை நுகர அவன் இல்லையே என வருந்தினாள் அவன் இளம் மனைவி. அந்நிலையில் அவன் புறப்பட்டு விட்டான் எனத் தூதுவர் வந்து கூறினர். அச்செய்தியைத் தோழி அவளுக்குக் கூறியது இது:

"ஒருகுழையொருவன்போல் இணர்சேர்ந்த மராஅமும்,
பருதியம் செல்வன்போல் நனைஊழ்த்த செருந்தியும்,
மீனேற்றுக் கொடியோன்போல் மிஞிறுஆர்க்கும் காஞ்சியும்,
ஏனோன்போல் நிறங்கிளர்பு கஞலிய ஞாழலும்,
ஆனேற்றுக் கொடியோன்போல் எதிரிய இலவமும்,
                                                                                 ஆங்குஅத், 5

தீதுநீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோலப்
போதுஅவிழ் மரத்தொடு பொருகரை கவின்பெற
நோதக வந்தன்றால் இளவேனில் மேதக;
பல்வரி இனவண்டு புதிதுஉண்ணும் பருவத்துத்
தொல்கவின் தொலைந்தஎன் தடமென்தோள் உள்ளுவார்? 10

ஒல்குபு நிழல்சேர்ந்தார்க்கு உலையாது காத்துஓம்பி,
வெல்புகழ் உலகத்தே விருந்துநாட்டு உறைபவர்;
திசைதிசை தேன்ஆர்க்கும் திருமருத முன்துறை
வசைதீர்ந்த என்நலம் வாடுவது அருளுவார்?
நசைகொண்டு தம்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித், தம் 15

இசைபரந்து உலகுஎடுத்த ஏதில்நாட்டு உறைபவர்;
அறல்சாஅய் பொழுதோடு எம்அணிநுதல் வேறாகித்
திறல்சான்ற பெருவனப்பு இழப்பதை அருளுவார்?
ஊறுஅஞ்சி நிழல்சேர்ந்தார்க்கு, உலையாது காத்துஓம்பி,
ஆறின்றிப் பொருள்வெஃகி அகன்றநாட்டு உறைபவர்; 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/82&oldid=1737255" இலிருந்து மீள்விக்கப்பட்டது