பக்கம்:கலித்தொகை 2011.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

83


வந்தடைந்த குடிமக்களைக் காத்து, அப்பகையரசனுக்குரிய செல்வங்களைக் கைப்பற்றிக் கொள்ள ஆசைகொண்டு, அப்பகையரசன் ஓடிவிட்ட நாட்டில் சென்று வாழும் நம் காதலரே அவர்; அவர் அதைச் செய்வாரோ?

- என்று இவ்வாறு கூறி, தோழி! நீ வருந்தாதே; நம் காதலர், போர் வெறிமிக்கமையால், பகைப் படையோடு மாறுபடும் யானைப் படையோடு வந்த பகைவர்களை வென்ற வெற்றிச் செல்வத்தோடு வருகின்றார் என்று, அவர் விட்ட தூதுவர் வந்து கூறுகின்றனர். ஆகவே, மேலும் வருந்தாதே!

ஒருகுழையொருவன்-பலதேவன். இணர்-பூங்கொத்து. மராஅம்-வெண்கடம்பு. பருதியம் செல்வன்-ஞாயிறு. நனை-அரும்பு. மீனேற்றுக் கொடியோன்-காமன். மிஞிறு-வண்டுகள். கிளர்பு-விளங்கி. கஞலிய-நெருங்கிய. ஆனேற்றுக் கொடியோன்-சிவன். எதிரிய-மலர்ந்த. தீதுநீர்-குற்றம் அற்ற. பொருகரை-நீர் அலைக்கும் கரை. ஒல்குபு-அலைக்கப்பெற்று. உலையாது-வருந்தாமல், விருந்து-புதிய. நசைகொண்டு-விரும்பி. அறல்-சிறுக ஓடும் அருவி. சாஅய்-அற்றுப்போன. திறல் சான்ற-பெருமைமிக்க. ஊறு-கேடு. தெருமரல்-மனம் கலவாதே. பொருமுரண்-போர் செய்யும் மாறுபாடு. செரு மேம்பட்ட-போரில் மேன்மையுற்ற.


26. இனையல் தோழி!

துரை நகரத்து மங்கையொருத்தி, இளவேனிற் பருவம் தொடங்குவதற்குள் வந்து விடுவேன் என வாக்களித்துச் சென்றிருந்த கணவன் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். அப்பருவம் வந்து விட்டது; ஆயினும் கணவன் வந்திலன். அதனால் அவள் பெரிதும் கலங்கினாள். அந்நிலையில் அவன் வரக்கண்ட தோழி, அதை அவளுக்கு அறிவித்து, அவள் துயரைப் போக்கியது இது:

"ஈதலிற் குறைகாட்டாது அறன் அறிந்து ஒழுகிய
தீதிலான் செல்வம்போல் தீங்கரை மரம்நந்தப்,
பேதுறு மடமொழிப், பிணைஎழில், மான்நோக்கின்,
மாதரார் முறுவல்போல் மணமௌவல் முகை ஊழ்ப்பக்,
காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப்போல், கழல்குபு 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/84&oldid=1737257" இலிருந்து மீள்விக்கப்பட்டது