பக்கம்:கலித்தொகை 2011.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

மா. இராசமாணிக்கனார்


மணத்தை வாரிக்கொண்டு, பிரிந்தோர்க்கு நோய் தரும் வேனிற் பருவத்தில், வாடைக் காற்று வந்து அலைக்குமே; நான் என்ன செய்வேன்?

இளவேனிற் காலத்து இன்பத்தை எண்ணிப் பாராமல், விட்டுச் சென்றவரிடத்தில் மனம் பற்றுக்கொண்டமையால் வாடும் மேனியின் வாட்டத்தை மாற்றும் வழியாது என, அறிந்து அம்முறைப்படியே அவ்வாட்டத்தை மறைத்தும் வாழ்வேன்; ஆனால், ஞாயிற்றின் கதிர்கள் மலர்த்த மலர்ந்த மலர்களில் தேன் உண்ணும் தும்பிக்கூட்டத்தின், யாழ் ஓசை போன்ற இனிய ஓசை எழும் மாலைக்காலம், துயர் மறைக்கும் என் மன ஆற்றல் அழியும்படி வருத்துமே; நான் என்ன செய்வேன்?

பிரிவு நோய் அளித்துக் கைவளைகளைக் கழலப்பண்ணிய காதலரிடத்தில் சென்று, அவரோடு கலந்து விட்ட என் உயிரைச் செல்ல விடாமல் தடுக்கவே நானும் கருதுகின்றேன். ஆனால், வண்டுகள் உண்ணும்படி, வரிசை வரிசையாக மலர்ந்த மலர்களின் மணம், நிலவொளி வீசும் இராக்காலத்தில் வந்து வருத்துமே; நான் என்ன செய்வேன்?

- எனப் பலப்பல சொல்லி வருந்தும், கைவளைகள் கழன்றோடுமாறு பிரிந்து, பொருளிடத்தில் ஆசை கொண்டு, பின்னோக்கித் திரும்பிவிட எண்ணாது சென்ற காதலர் வினையை விரைந்து முடித்துக்கொண்டு, உன் பற்கள் புகழ்பெறுவதற்குக் காரணமான, தேன்போல் இனிக்கும் உன் சொல் நயத்தை விரும்பி, தீர்த்தற்கு அரிய நம் துயரைத் தீர்த்தற் பொருட்டு வந்துசேர்ந்தார்!

வயவு-கருவுற்ற மகளிர்க்கு உண்டாகும் வேட்கை. அல்லாந்தார்-வருந்திய சுற்றத்தார். புனிறு-கருவுயிர்த்த காலத்துத் தூய்மைக் குறைபாடு. ஓரீஇ-தீர்ந்து. ஏர்தர-அழகுண்டாக. வளையவர்-இளைய மகளிர். வண்டல்-மணல் வீடு. எக்கர்-மணல்மேடு. போழ்ந்து-பிளந்து. ஐய-நுண்ணிய. சூழ்பு-ஆராய்ச்சி. விடுத்த-மலர்த்திய. இரும்-கரிய. தோயும்-படியும். கங்குல்-இரவு. களைஞர்-போக்குபவராய்.


29. தேர் அயர்மதி!

வேனிற் பருவம் வரவும் கணவன், வராதிருந்தமையால் கவலை கொண்ட அவன் மனைவி, கடந்த ஆண்டு வேனில் விழாவை நினைந்து கவலை கொண்டாள். 'இளவேனிற் பருவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/91&oldid=1737268" இலிருந்து மீள்விக்கப்பட்டது