பக்கம்:கலியன் குரல்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியனின் வாழ்வும் வழியும் எவ்விதக் காழ்ப்புமின்றி இருப்பதற்கு அறிகுறியாகத் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடலரசனும் கோவிந்தராசனும் அருகிலேயே -ஒரே சந்நிதியில் திருக்கோவில் கொண்டுத் திகழ்வதும் ஒரு காரணமாக கொண்டேன் என்பதை உங்கள் முன் தெரிவித்துக் கொள்கின்றேன். கலியன்: முதலாவதாக இந்தக் கலியன் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டும்; தெரிவிப்பேன். சோழ மண்டலத்தில் 'திருவாலி நாடு’ என்ற ஒருபகுதியுண்டு. இதுவே மங்கைநாடு’ என்று கருதவும் இடமுண்டு. இப்போது சிறப்புடன் திகழும் திருநகரிப் பகுதியைச் சார்ந்தது (இப்போது தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ளது). சோழ வேந்தனின் சேனைத்தலை வராகத் திகழ்ந்தவர் நீலன் என்பார். இவர் களளர்குலத் தைச் சார்ந்தவர். இவருக்குத் திருமகனாகப் பிறந்தவர் இவர், பிறந்த ஆண்டு நள என்பது; மாதம் கார்த்திகை; நாள் முழுமதியம் கூடிய கிருத்திகை நட்சத்திரம் கலந்ததிருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே என்பது, இவரது வாழித் திரு நாமம், இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் கலியன் என்பது. இவரே பின்னர் திருமங்கையாழ்வாராகின்றார். தந்தையாருக்குப் பிறகு கலியன் ஆலிநாட்டின் தலை வ ராகவும் சோழ மன்னனின் தானைத் தலைவராவும் விளங்கு கின்றார். இவருக்கு நீர்மேல் கடப்பான். கிழலிலொதுங்குவான், தாள் ஊதுவான், தோலாவழக்கன் என்ற அமைச்சர்கள் 2. Tamił Studies ercầrugsèr agstiftuř sruh. நிேவாச அய்யங்கார் Thief's caste என மொழி பெயர்த்துக் கெடுத்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/10&oldid=775459" இலிருந்து மீள்விக்கப்பட்டது