பக்கம்:கலியன் குரல்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் கோனே குறுங்குடி யுள்குழகா திருநறையூர்த் தேனே வருபுனல்சூழ் திருவிண்னக ரானே ச்ே (குழகன் கலந்து கொள்ள நிற்பவன்; வருபுனல் - பெருகுகின்ற தீர்த்தங்கள்) என்ற அடிகளில் திருநறையூர்த் தேனே' என்று அடுத்து 10 பதிகங்களாலும் இரண்டு மடல்களாலும் மங்களாசாசனம் செய்யப் போகின்ற திருநறையூர் நம்பி இவர் உள்ளத்தில் காட்சி தருகின் றார். திருருறையூர்த்தேனே!”, “பட்டர் திருநறையூர்ப் பெருக்குக் குச் சினையாறு படுகின்றது கிடாய், என்று அருளிச்செய்வர்” என்பது பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியான பூ சூக்தி, இதனை விளக்குவது இன்றியமையாததாகின்றது. திருவிண்ண கர் விஷயமான இத்திருமொழி (6.3) முடிந்தவுடனே, "கண்ணுஞ் சுழன்று (6,4) என்ற திருமொழி தொடங்கிச் சினவிற்செங்கண்' (7.3) என்ற திருமொழியளவும் நூறு பாசுரங்களாலே திரு நறையூரை அநுபவிக்கப் போகிறாரே ஆழ்வார்; அதற்குள்ளே இப்போது திருநறையூர்த் தேனே!’ என்று அத்திருப்பதியைப் பற்றிச் சுட்டுவானேன்? என்று நஞ்சீயர் போல்வார் பட்டரைக் கேட்டனர். அதற்கு பட்டர் அருளிச் செய்த மறுமாற்றம் இது: இதன் கருத்து யாதெனில், ஆற்றில் பெருவெள்ளம் வருவதற்கு முன்னே ஆறு பொசிந்து காட்டுவது வழக்கம்; அதுபோலே, நூறு பாசுரங்களால் திருநறையூர்த் திருப்பதியதுவமாகிற பெருவெள் ளம் அண்மையில் வந்து விட்டதால் அதற்கு முன்அடையாள மாகத் திருநறையூர்த் தேனே!’ என்று இவ்வாறு பொசித்து காட்டுகின்றது. இத்தகைய அழகிய நுண்பொருள் பட்டர் திருவுள்ளத்தில்தானே தோன்றும்! (5) திருகங்கூர் மணிமாடக்கோயில் மங்களா சாசனப், பாசுரமென்றின் இயற்கை வருணனையில் எருமைகளின் இருப்பை TA LLCS MACASLLLAYSCMA AMM eeAAA SAAAAAS LAAAAAMSMSMSMS 64. பெரி. திரு. 5, 2: 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/100&oldid=775464" இலிருந்து மீள்விக்கப்பட்டது