பக்கம்:கலியன் குரல்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் கின்றேன்’ என்று இவனுக்குக் கண்ணழிவு சொல்ல வொண் ணாததேசம்’ என்பது. இதனை விவரிப்பேன் தலைவியை விட்டுப் பிரிந்துசெல்லும் தலைவன் நல்வாழ்க்கைக்கு உறுப்பாக வுள்ள அரும்பெரும் பொருள்கள் திரட்டிக் கொணர்வதற்காகத் தொலை நாடு செல்ல அவசியமில்லாதபடி கிருப்புல்லணையில் மனை வாயிலிலே மணியும் முத்தும் மலிந்து கிடக்கின்றன வாதலின், அங்குச் சென்று கூடினோமாயின் பொருள்வயிற் பிரிவும் நேரமாட்டாது என்பது குறிப்பு. மேலும் ஆழ்வார், 'பொங்கு முந்நீர்க்கரைக்கே மணியுந்து புல்லாணி’ (4) என்றும் ‘புணரியோதம் பணிலம் மணியுந்து புல்லாணி’ (5) என்றும் ‘புரவி என்னப் புதம் செய்து வந்துத்து புல்லாணி’ (7) என்றும் இங்குள்ள கடலை வருணித் திருப்பதைக் கண்டு மகிழலாம் இந்த ஊர்க்கடற்கரைக்கு பொன்னங்கழிகானல் எனத் திருநாம, இட்டு மகிழ்கின்றார். ஆழ்வார் வானமாமலையில் சேற்றுத்தாமரை என்ற திருநாமத்துடன் (திருவாய், 5 7: 1) தடாகமும் தேனமாம் பொழில்’ என்ற திருநாமத்துடன் தோப்பும் (5, 7: 6), திருமோகூரில் தாளதாம ை என்ற திருநாமத்துடன் தடாகமும் நம்மாழ்வார் திருவாக்கில் வந்துள்ளமை ஈண்டு நினைந்து மகிழ்வதற்குரியவை. இங்குள்ள கடற்கரைச் சோலைகள் ஆழ்வார் திருவாக்கில் மிக அற்புதமாக இடம் பெற்றுள்ளன. இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரை புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகாய புல்லப்ாணி ?? 8. புரவி - குதிரை; புதம்செய்தல் - தாவிப்பாய்தல். 1. பெரி. திரு. 9, 3; 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/104&oldid=775472" இலிருந்து மீள்விக்கப்பட்டது