பக்கம்:கலியன் குரல்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}4 கவிடின் குரல் 'சப்பாணிகொட்டுதல்' என்னும் உறுப்பு நடைபெறுகின்றது. பிற்காலப் பிள்ளைத்தமிழின் பத்துறுப்புகளில் ஒன்றாகி விடுகின்றது. பூங்கோதை ஆய்ச்சி கடைவெண்ணெய் புக்குண்ன ஆங்கவன் ஆர்த்துப் புடைக்க, புடைப்புண்டு ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் ஓங்கு ஒத வண்ணனே; சப்பாணி; ஒளிமணி வண்ணனே! சப்பாணி.8 (பூங்கோதை ஆய்ச்சி-தன்னைப் படர்க்கையாகச் சொல்லிக்கொண்ட படி; ஆழ்வார் யசோ:ை பேசும் பாசுரமாக அருளிச் செய்தாலும் தரமான நன்மை யும் இடைஇடையே தலைக்காட்டிக் அதனால் யசோதையைப் படர்க்கையாகக் குறிக்கின்றார் என்றும் கொள்ளலாம்) காட்டுப்புற இலக்கியக் கூறுகள்: பக்தி இலக்கியக் காத்தில் தோன்றிய ஆழ்வார்களின் பாசுரங்கள் யாவும் பொது விருப் பானவை. நாட்டு மக்கள் யாவரும் இந்த இயக்கத்தில் பங்கு கொண்டமையால், ஆழ்வார்கள் நாட்டுப்புறப் பாடகளின் பாணியைப் பின் கற்றிப் பாசுரங்களை அமைத்துப் பாடியுள்ளனர். மணிவாசகப் பெருமான்தான் நாட்டுப்புற இலக்கியக் கூறுளைப் பெருமளவில் அமைத்துப்பாடி வெற்றிகண்டவர். பாடிய வாய் தேனுறும் திருவாசகத்தில் இந்த அமைப்பை வெற்றியுடன் கையாண்டிருப்பதைக் காணலாம். திருமங்கையாழ்வார் புலமை நிரம்பிய பெருதகை: காலுகவிப் பெருமான் என்று வழங்கப்பெற்றவர். ஆகவே அவர் நாட்டுபுற இலக்கியக் கூறுகளையும் அமைத்துச் சிலதிகங் களை அருளியுள்ளார். சாழல் என்பது மகளிர் விளைாடும் விளையாட்டுகளில் ஒன்று. எம்பெருமானின் எளிமைக் குண்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/111&oldid=775488" இலிருந்து மீள்விக்கப்பட்டது