பக்கம்:கலியன் குரல்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியனின் வாழ்வும் வழியும் இச்செய்தி கலியன் செவிக்கு எட்டியது. நின்றவா நில்லா செஞ்சினை யுடைய ராய் மருத்துவ பாக வ தோத்த மரைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பெண்பிள்ளை ஏதோ காரியமாக இல்லத்திலிருந்து புறத்தே வரக் கண்டார்; அப்பெண்ணின் எழில் திரு மேனியும் அன்ன நடையும் மருண்ட மான்நோக்கும் கலியனைக் கவர்ந்தன. அப்பெண் தம்மை அடைந்த வரலாற்றைக் கூறினார். அவள் திருமணம் பற்றியும் கவலை தெரிவித்தார். உடனே கலியன் தாம் அவளை மணப்பதாகக் கூறினார். வளர்ப்புத்தாய் தந்தையர் அவளை இவருக்குத் தர யோசித்துக் கொண்டிருக் கையில், அவள் திருவிலச்சினையும் பன்னிரு திருமண்காப்பும் உடையவர்க்கொழிய மற்றொருவருக் கென்னைப் பேசலொட் டேன் என்று தன் குறிக்கோளைத் தெரிவித்தாள். கலியனும் திருநறையூர்' சென்று அங்கு எழுந்தருளியுள்ள நம்பி திருமுன்பு திருவிலச்சினை பெற்று பன்னிரண்டு திருமண்காப்புகளையும், தரித்துக்கொண்டு வந்தார். குமுதவல்லியார் கலியனைப் பார்த்து, ஓராண்டு நாடோறும் 1008 ரீ வைணவர்கட்கு அமுது செய்வித்து அவர்களுடைய ரீபாத தீர்த்தமும் பிரசாதமும் உண்டு நிறைவேற்றினாலொழிய நான் தங்களைக் கணவனாக ஏற்றுக்கொள் வதற்கில்லை’ என்று ஒரு நிபந்தனை விதித்தாள். இவரும் அவள்மீது கொண்ட ஆராக்காதலாலே அங்ங்னம் செய்வதாக வாக்குறுதி செய்து தந்தார்; நிபந்தனையை நிறைவேற்றவும் செய்தார். அதன்பிறகு குமுதவல்லியாரை :நாடும் ஊரும் அறியக் கண்ணாலம் கோடித்துக் கலியனைக் கைபிடிக்கச் செய்தனர் குமுதவல்லியின் வளர்ப்புப் பெற்றோர் ද්ණ්• هني. 3 , 2 ق هيَ .a له . 3 4. கும்பகோணத்திற் கருகிலுள்ள "நாச்சியார் கோயில்' என்வழங்கும் ஊர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/12&oldid=775504" இலிருந்து மீள்விக்கப்பட்டது