பக்கம்:கலியன் குரல்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hić கவியன் குரல் படிமம் நம்மிடம் பாட்டதுபவத்தை மிகுவிக்கின்ற தன்றோ? அடுத்த பாசுரத்தில் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் ஆமலர: என்ற தொடரில் பயமாகியசுரம் (காய்ச்சல்) வருவதைக் காணலாம். இது நொப்புலப் படிமமாகும். இயக்கப்புலப் படிமங்கள்: ஒரு பொருள் அல்லது மனிதனின் இயக்கத்தை விளக்குவது இந்நிலைப் படிமமாகும். செவிப்புலப் படிமம் காட்டப் பற்றபோது இவை காட்டப்பெற்றன. ஈண்டு இன்னொன்றைக் காட்டுவேன். ஒண்மிதியில் புனல்உருவி ஒருகால் நிற்ப ஒருகாலும் காமருசீர் அவுனன் உள்ளத்து எண்மிதியும் கடந்து அண்டம்மீது போகி இருவிசும்பி னுண்டுபோய் எழுந்து, மேலைத் தண்மதியும் கதிரவனும் தவிர ஓடி, தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே95 ஆழ்வார் திரிவிக்கிரமாவதாரத்தை அநுபவிக்கும் பாசுரம் இது. இதில் புனல் உருவுதல், எண்மதியும் கடத்தல், அண்டம் மீது போதல், இருவிசும்புனுடுபோதல் எழுதல், தவிர ஓடுதல், புறந்தடவுதல், அப்பால் மிகுதல்-இவை யாவும் இயக்கப்புலப் படிமங்கள். இவை ஒருங்கிணைந்து ஓங்கி உளகளந்த உத்தமனை அற்புதமாகக் காட்டுவதைக் கண்டு மகிழலாம். படிமங்களின் கலவை: பெரும்பாலும் படிமங்கள் தனித்து வருதல் அருமை; அவை கலவையாகவே கவிதையில் அமைந்து 5. திடும். 20 95. திரு. நெடுந் 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/123&oldid=775514" இலிருந்து மீள்விக்கப்பட்டது